தூத்துக்குடியில் மணிமண்டபம் .. புதிய நீதிக்கட்சி
மதுரை:
தமிழ் நாடு வ.உ.சி. பேரவையுடன் சேர்ந்து சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ. சிதம்பரனாரின் நினைவாக தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில்மணிமண்டபம் கட்டவுள்ளோம் என்று புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தமிழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வ.உ.சி. பேரவையினர் புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்திய விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய நீதிக் கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் பேசியதாவது:
மிகச் சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியான வ.உ.சிதம்பரனாருக்கு மணிமண்டபம் கட்டுவதில் மாநில அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.இதனால் புதிய நீதிக் கட்சியும், தமிழ் வ.உ.சி.பேரவையும் இணைந்து மணிமண்டபம் கட்டத் தீர்மானித்துள்ளோம்.
தூத்துக்குடியில் கட்டப்படவுள்ள இந்த மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா இந்த மாதத்திற்குள் நடக்கும். பின்னர் குருபூஜை நடத்தி இந்த வருடத்திற்குள்மணிமண்டபம் கட்டிமுடிப்போம்.
நாங்கள் அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு கூட்டணியையும் எதிர்க்கிறோம். தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் 70 தொகுதிகளில் புதிய நீதிக் கட்சிக்குசெல்வாக்கு உள்ளது. 70 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார் ஏ.சி.சண்முகம்.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
