குண்டர் சட்ட கைதிகள் குறித்து விசாரணை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரங்களை குண்டர் தடுப்புச்சட்ட ஆலோசனை வாரியம் ஆராய்ந்து வருகிறது.
இதுகுறித்து, குண்டர் தடுப்புச் சட்ட ஆலோசனை வாரியத் தலைவர் நீதிபதி கனகராஜ் நிருபர்களிடம் கூறுகையில், மதுரையில் நடைபெறும் நீதிபதி கனகராஜ்தலைமையிலான இந்த வாரியத்தின் முதல் நாள் ஆய்வின் போது மதுரை, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட 16 கைதிகள் பற்றி விசாரித்தவாரியம் ஆதாரங்கள் இல்லை எனக் கூறி விடுதலை செய்ய உத்தரவிட்டது.
மேலும் 2 நாள் நடைபெறவுள்ள இந்த ஆய்வில், கோயம்புத்தூர், திருச்சி, வேலூர் சிறைகளில் உள்ள குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை பற்றிஆராயும்.
ஆய்விற்கு பின் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அரசுக்கு அறிக்கையாக அளிக்கப்படும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications