இழுபறி நிலையில் கோவை குண்டுவெடிப்பு வழக்கு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 53 பேருக்கு ஆதரவாக ஆஜரான வக்கீல்கள் நான்கு பேர்விலகினர். இதைத் தொடர்ந்து குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

கோவையில் கடந்த 98ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி அத்வானி வருகையையொட்டி அவரைத் தீர்த்துக் கட்டசதித்திட்டம் நடந்தது. மேலும், பல இடங்களில் குண்டு வைத்து தகர்க்க வெடிகுண்டுகள் வைக்கப்பட்டன.

குண்டுகள் வெடித்த சம்பவத்தில் 60 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 250 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக அல்உம்மா தலைவர் பாட்ஷா, கேரள ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் அப்துல்நாசர் மதானி உட்பட 164 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்ளில் 53 பேரைத் தவிர மற்றஅனைவரும் தங்களது செலவில் வழக்கறிஞர்களை நியமித்துக் கொண்டனர்.

இந்த 53 பேருக்கும் வக்கீல்களை நியமிக்க இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில்,பிள்ளை., இளவழகன், குருநாதர், பஷீர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஆனால், இவர்கள் இப்போது இந்தவழக்கில் கைதிகள் ஒத்துழைப்பு இல்லாததால் தங்களால் வாதட முடியாது என மறுத்து நீதிபதியிடம் தங்களதுவிலகல் கடிதத்தை அளித்தனர்.

இந்த விலகலையடுத்து மீண்டும் இவர்களுக்கு வக்கீல்கள் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. இனி, அரசே தனதுசொந்த செலவில் சிறப்பு வக்கீல்கள் பிரிவிலிருந்து நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து, கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்ந்து தேக்க நிலை ஏற்பட்டு வருகிறது. இதில், ஒருவர்தனக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பு இல்லை எனக் கூறி நீதிபதியிடம் மனுச் செய்துள்ளார். இந்த மனு மீதானவிசாரணை வரும் 26ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இது தவிர, குண்டு வெடிப்பு வழக்கை தனி நீதிமன்ற நீதிபதி தணிகாசலம், வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்துஉத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+