இடைத்தேர்தல்: பல இடங்களில் தே.ஜ. கூட்டணி வெற்றி
டெல்லி:
பிப்ரவரி 19 ம் தேதி 9 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடந்த 12 சட்டசபைத் தொகுதிகளில் தேர்தல் முடிவுஅறிவிக்கப்பட்ட 8 தொகுதிகளில் 6 தொகுதிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியுள்ளது.
சட்டீஸ்கார் மாநிலத்தில் மார்வாய் தொகுதியின் வேட்பாளராக நிற்கும் முதல்வர் அஜித் ஜோகியும், ஜார்க்கன்ட்மாவட்டத்தில் உள்ள ராம்கார் தொகுதியில் வேட்பாளராக நிற்கும் பாபுலால் மாரண்டியும் தங்களை எதிர்த்து நிற்கும்வேட்பாளர்களை விட முன்னணியில் உள்ளனர்.
கடந்த பிப்ரவரி 19 ம் தேதி 9 மாநிலங்களில் உள்ள 12 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது.
இதுவரை முடிவு அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 3 இடங்களையும், தெலுங்கு தேச கட்சி 2இடங்களையும், சிரோமணி அகாலி தள் ஒரு இடத்தையும் பெற்றுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலா ஒரு இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் சாகாப்பூர் மற்றும் ராஜஸ்தானில் ஹின்டோலி தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சிவேட்பாளர்கள் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். அங்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி முகம் கண்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் சஹாரான்பூர் சட்டசபைத் தொகுதியையும் பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பாரத்னா தொகுதியை சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் பிரதீப் குமார் யாதவ் கைப்பற்றியுள்ளார்.அவர் 7,368 ஓட்டுக்கள் பெற்றுள்ளார். அங்கு பகுஜன் சமாஜ் வாடி கட்சி இரண்டாம் இடத்தையும், பாரதிய ஜனதாகட்சி மூன்றாவது இடத்தையும் கைப்பற்றியுள்ளது.
ஆந்திரப்பிரதேசத்தில் பாட்வெல் மற்றும் கிடலூர் சட்டசபைத் தொகுதிகளில் ஆட்சியில் இருந்து வரும் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
பாடவெல் தொகுதியை தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் விஜயம்மா கைப்பற்றியுள்ளார். இவர், 19, 375ஓட்டுக்களைப் பெற்று காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிவ ராமகிருஷ்ண ராவைத்தோற்கடித்துள்ளார்.
இதே போல் கிடலூர் சட்டசபைத் தொகுதியை தெலுங்கு தேச வேட்பாளர் சாய் கல்பனா கைப்பற்றியுள்ளார். இவர்பெற்ற ஓட்டுக்களின் எண்ணிக்கை 25, 091. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பீரா ரெட்டிதோல்வியடைந்தார்.
முன்னணியில் முதல்வர்கள்:
இதற்கிடையே, சட்டீஸ்கார் மார்வாய் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், முதல்வருமான அஜித் ஜோகி 6,963ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.
இதே போல் ஜார்கன்ட் மாநில முதல்வர் பாபு லால் மாரண்டி 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில்உள்ளார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications