இங்க வாங்க...இங்க வாங்க: கண்ணப்பனை இழுக்கும் தொண்டர்கள்
சென்னை:
மக்கள் தமிழ் தேசக் கட்சியின் சார்பில் தங்கள் தொகுதியில் போட்டியிடக் கோரி சுமார் 30 பேர் முன்னாள்அமைச்சர் கண்ணப்பனுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
இந்தக் கட்சியை ஆரம்பித்து நடத்தி வருபவரும் கண்ணப்பன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. யாதவசமூகத்தினரின் வாக்குகளை நம்பித் துவக்கப்பட்டுள்ளது இக் கட்சி.
தமிழக சட்டசபைக்குத் தேர்தல் வரவுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கட்சியினரிடமிருந்துவேட்பு மனுக்களைப் பெறுவதில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன.
ஜாதிக் கட்சியாக இருந்து தேர்தலையொட்டி அரசியல் கட்சியாக மாறிய மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மற்றும்மக்கள் தமிழ் தேசக் கட்சி ஆகியவை தேர்தலில் போட்டியிடுவதற்கு விரும்பும் தங்களது தொண்டர்களிடமிருந்துவேட்பு மனுக்களைப் பெற்று வருகின்றன.
மதுரை உள்ளிட்ட சில தென் மாவட்டங்களில் செல்வாக்கு உள்ளதாகக் கருதப்படும் மூவேந்தர் முன்னேற்றக் கழகம்சார்பில் போட்டியிட இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் மனுச் செய்துள்ளனர். இக்கட்சியின் சென்னை, மதுரை,நெல்லை அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
சென்னையில், கட்சி நிறுவனரும், தலைவருமான டாக்டர் சேதுராமன் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்கிறார்.மேலூர், ஆத்தூர், திண்டுக்கல், காரைக்குடி, திருப்பத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சமயநல்லூர், வாசுதேவநல்லூர், அரூர்,செஞ்சி, ராஜபாளையம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட இதுவரை விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கட்சிவட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 3-ம் தேதி வரை இந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணப்பனுக்காக 30 மனுக்கள்:
யாதவ சமூக வாக்குகளை நம்பித் துவக்கப்பட்டுள்ள மக்கள் தமிழ் தேசக் கட்சி சார்பில் அக்கட்சித் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான எஸ்.கண்ணப்பன் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடக் கோரி அவரதுகட்சியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் இந்தியன் வங்கித் தலைவருமான எம்.கோபால கிருஷ்ணன்புவனகிரி தொகுதியில் போட்டியிடக் கோரி சிலர் மனு செய்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications