மாஸ்கோ மாணவர்கள் குஜராத்துக்காக நிதி வசூல்
மாஸ்கோ:குஜராத் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காகமாஸ்கோவில் உள்ள இந்திய பள்ளி மாணவர்கள் நிதி வசூல் செய்து வருகின்றனர்.குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்தில் 25, 000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். கோடிக் கணக்கில் பொருட்கள் சேதம்அடைந்தன.
தற்போது குஜராத் மக்களுக்கு உதவி செய்யும் வண்ணம் நிவாரண நிதி வசூல் செய்யும் பணியில் பள்ளிக் குழந்தைகள் ஈடுபட்டு வருகின்றன. இவர்கள்தனிநபர் மற்றும் பல்வேறு நிறுவனங்களிலிருந்து நிதி வசூல் செய்து முடித்த பின் தற்போது பல நிகழ்ச்சிகள் நடத்தி நிதி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.
குறிப்பாக, மாணவர்கள் இந்திய வகை உணவுகளை தங்கள் வீடுகளில் தயார் செய்து விற்பனை செய்கிறார்கள். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைகுஜராத் பூகம்ப நிவாரண நிதிக்கு வழங்குகிறார்கள்.
சர்வதேச ஸ்கவுட் மற்றும் கைட்ஸ் டே கொண்டாடியும் மாணவர்கள் நிதி வசூல் செய்து வருகின்றனர்.
மேலும் சிந்திக்கும் தின விழா கொண்டாடி அவர்கள் நிதி வசூல் செய்தனர். சிந்திக்கும் தினத்தைத் தொடங்கி வைத்த இந்தியப் பள்ளியான கேந்திரியவித்யாலயா முதல்வர் சர்மா கூறுகையில், பள்ளிக்கூடங்களில் நடக்கும் ஸ்கவுட் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாகும்.
தற்போது, குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காரி - காமாய் என்ற நிகழ்ச்சிகளை நம் பள்ளிக் குழந்தைகள்நடத்துவது மிகவும் சந்தோஷத்துக்குரியது.
பள்ளி மாணவர்கள், குஜராத்தில் வாழும் மக்களின் நலனிற்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டு நடத்தும் இந்த நிகழ்ச்சி என்னை மிகவும் சந்தோஷப்படவைக்கிறது என்றார்.
முன்னதாக, இந்த விழாவுக்குத் தலைமை தாங்கிய ரஷ்யாவிலுள்ள இந்திய தூதரகத்தின் கடற்படை பிரிவு கமாண்டர் குமார் கூறுகையில், குஜராத்மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இங்கு செயல்படும் பள்ளி மாணவர்கள் நிதி வசூல் செய்வது மனதை மகிழ்ச்சியடையவைக்கிறது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications