எய்ட்சை கட்டுப்படுத்த ரூ. 180 கோடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நலத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 5780 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ரூ. 180 கோடி எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்காகஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நலத்துறைக்கு ரூ. 4,920 கோடி தான் ஒதுக்கப்பட்டது.
2003ம் ஆண்டுக்குள் நாட்டில் 100 பேருக்கு 3.5 என்ற அளவில் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனநிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
இது கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இருந்த தொலைபேசிகளின் எண்ணிக்கையைவிட இரு மடங்கு அதிகமாகும். நாட்டில்இப்போது 8 லட்சம் எஸ்.டி.டி. பூத்கள் உள்ளன.
வருமான வரியைப் பொறுத்தவரை சர்சார்ஜ் குறைப்பு தவிர வருமான வரியில் பிற முக்கிய மாற்றங்கள் எதையும் நிதியமைச்சர்யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கவில்லை.
ஆனால், நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களுமே வருமான வரிக் கணக்கை சமர்பிக்க வேண்டும் எனஉத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications