ஆயுத குவிப்பில் இந்தியா - பாக் தீவிரம்: சி.ஐ.ஏ.புகார்
வாஷிங்டன்:
இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத ஏவுகணை தயாரிப்புத் திட்டங்களில் முழுவீச்சில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க புலனாய்வுத்துறை (சி.ஐ.ஏ)தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அளித்த, உலக நாடுகளின் ஆயுத தயாரிப்பு தொழில்நுட்பங்கள் பற்றிய அறிக்கையில், இதுபற்றி தெரிவித்துள்ள சி.ஐ.ஏ,பாகிஸ்தான் குறைந்த தூர அணு ஆயுத ஏவுகணைத் தயாரிப்பில் இறங்கியுள்ளதாக கூறியுள்ளது.
பாகிஸ்தானின் அணு ஆயுத உற்பத்திக்கு சீனா உதவி வருகிறது. ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தானிற்கு அணு ஆயுதங்களைவிற்ற சீனாவிற்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருந்தது.
பாகிஸ்தானிற்கு அணு ஆயுத விற்பனையோ, தொழில் நுட்ப உதவியோ அளிக்க மாட்டோம் என சீனா தெரிவித்த பிறகே அத்தடைகளை அமெரிக்காநீக்கியது. பாகிஸ்தானிற்கான சீன உதவிகள் தொடர்வதோடு, பல மேற்கு ஐரோப்பிய நாடுகள், பாகிஸ்தானிற்கு அணு ஆயுத தொழில் நுட்பங்களைஅளித்து வருகின்றன.
இந்தியாவும் அணு ஆயுத தயாரிப்பு திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அணு ஆயுத தொழில்நுட்ப அறிவில் பின்தங்கியுள்ள இந்தியா, ரஷ்யா உள்ளிட்டநாடுகளிலிருந்து அவற்றை பெற்று வருகிறது.
இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது என 2000ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான அறிக்கையில் சி.ஐ.ஏ.தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications