காமாட்சி கோவிலில் ரகசிய யாகம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் கறுப்பு குதிரை, கறுப்பு ஆடு போன்றவற்றிற்கு நடந்த ரகசிய யாகம்அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் காமாட்சி கோவிலில் கடந்த மாதம் சென்னை மேயர் ஸ்டாலின் தனது குடும்பத்துடன்சென்று சாமி கும்பிட்டு விட்டுச் செனறார்.
இதையடுத்து, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உயிர்த்தோழிசசிகலாவும் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று யாகம் நடத்தினார். அப்போது அவர் கையில் கொண்டு வந்தபெட்டி அனைவரையும் சந்தேகப்பட வைத்தது.
இதற்கிடையே, சசிகலாவைத் தொடர்ந்து ஜெயலலிதா சார்பில் காமாட்சி கோவிலில் யாகம் நடத்தப்பட உள்ளதுஎன வதந்தி பரவியது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே கோவில் பிரகாரத்தைச் சுற்றி கட்சிப்பிரமுகர்கள், போலீஸார் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வர ஆரம்பித்து விட்டனர். ஆனால் செவ்வாய்க்கிழமையாரும் யாகம் நடத்தவில்லை.
ஆனால் திங்கள்கிழமை இரவு யாருக்கும் தெரியாமல் ரகசிய யாகம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கறுப்பு வேட்டி, துண்டு அணிந்த 10 க்கும் மேற்பட்ட அந்தணர்கள் யாகம் நடத்தினார்கள். அவர்களுடன்வந்திருந்த 2 பெண்களும் கருப்பு சேலை உடுத்தி யாகத்தில் கலந்து கொண்டார்கள். யாகத்தில் கருப்பு தேன், கருப்புகயிறு ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
எந்தக் கட்சிக்காக யாகம் நடத்தப்பட்டது என்பது குறித்து விவரம் தெரியவில்லை. மார்ச் 2 ம் தேதி வரை யாகம்நடக்கவிருப்பதால் பொதுமக்கள் யாருக்கும் காமாட்சி அம்மன் கோவிலில் அனுமதி இல்லை என்று கோவில்நிர்வாகத்தார் கூறியுள்ளனர்.
கோவில் நிர்வாகத்தாரைக் கேட்ட போது, மழை வேண்டி யாகம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர். ஆனால் இந்ததிடீர் யாகம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்












Click it and Unblock the Notifications