மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்தது
டெல்லி:
நூறு கோடி மக்களை இருபது நாட்களில் எண்ணி முடிக்கும் இமாலய சாதனையை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறை நிறைவு செய்துள்ளது.
அதன் நிறைவு கட்டமாக புதனன்று இரவு ரோட்டோரங்களில் தங்கியிருக்கும் அனாதைகள், வீடற்றோர், பிச்சையெடுப்போர் ஆகியவர்கள் பற்றியதகவல்களை சேகரித்தனர்.
முதன்முறையாக இந்திய கணக்கெடுப்பின் போது ரோட்டோரங்களில் வாழ்வோரையும் கணக்கில் கொள்வதற்கு இம்முறை நடவடிக்கைஎடுக்கப்பட்டிருந்தது.
இதனையொட்டி, கணக்கெடுப்பு பணிக்கு சென்ற பணியாளர்களுக்கு வினோதமான அனுபவங்கள் ஏற்பட்டன. பலர் தங்களை பற்றிய விபரங்களைதந்தாலும், சிலர் இவர்களை கண்டதும் விரட்டிவிட்டனர்.
25 வருடமாக எங்களுக்கு ஒன்றும் செய்யாத அரசாங்கத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்றிருக்கிறார் ஒரு மூதாட்டி. அவரை பற்றியதகவல்களை அருகிலிருந்தவர்களிடம் கேட்டு குறித்து கொண்டார் சுரேந்தர் குமார் பட் என்ற கணக்கெடுப்பாளர்.
கணக்கெடுப்பின் போது கிடைக்கும் தகவல்களை வைத்து தங்களை போலீஸார் இரவு நேர தங்குமிடங்களிலிருந்து விரட்டியடிக்கக் கூடும் என பலர்பயப்படுகின்றனர். அவர்களை சமாதானப்படுத்தி தகவல்களை சேகரிக்க வேண்டியிருந்தது என்கிறார் பட்.
இக்கணக்கெடுப்பிற்கு பொறுப்பாளரான இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவுத்துறை அதிகாரி ஆர்.ஜி.மித்ரா இது குறித்து கூறும் போது, புதனன்றுநள்ளிரவோடு கணக்கெடுக்கும் பணி முடிவடையும் என கூறப்பட்டிருந்தாலும், ரோட்டோரங்களில் தங்குபவர்கள் நள்ளிரவிற்கு மேல் தான் படுக்கவருவதால் கணக்கெடுக்கும் பணி கடைசி நபர் கணக்கிடப்படும் வரை நடந்தது.
1872 ல் தொடங்கிய இந்திய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி,
இடைவிடாமல் 14வது முறையாக தொடர்ந்துள்ளது. உலகிலேயே இந்தியாவில் மட்டுமே இடைவிடாமல் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகைகணக்கெடுக்கப்படுவதாக இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் ஜெயந்த் குமார் பந்த்யா தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications