வீரப்பனின் மூன்றாவது கூட்டாளி கைது
கோவை:
ஈரோடு மாவட்டம் சத்யமங்கலம் காட்டுப்பகுதி அருகே, வீரப்பனின் நெருங்கிய கூட்டாளியும், தமிழர் தேசியமீட்புப் படையைச் சேர்ந்தவருமான மதி என்ற கிருஷ்ணமூர்த்தியை அதிரடிப்படை போலீஸார் புதன்கிழமை கைதுசெய்தனர்.
அதிரடிப்படையில் உள்ள இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையிலான போலீஸார் இவரைக் கைது செய்தனர்.அவரிடமிருந்து துப்பாக்கிக் குண்டுகள், போலராய்டு கேமரா, மைக்ரோ கேஸட் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.
இதுகுறித்து அதிரடிப்படை ஐ.ஜி.பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் விடுதலையாவதற்கு சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்தி,வீரப்பனுடன் சேர்ந்து கொண்டார். பின்னர் வீரப்பனிடமிருந்து பிரிந்து திண்டுக்கல் சென்றார்.
கடந்த பிப்ரவரி 2 ம் தேதி வீரப்பன் கும்பலுடன் சேர்ந்து இவரும் அதிரடிப்படையினர நோக்கித் துப்பாக்கியால்சுட்டதை இவர் ஒத்துக் கொண்டுள்ளார்.
கிருஷ்ணமூர்த்தி கூறுகையில் முதலில் நான், தமிழ்நாடு மீட்புப்படையை விட்டு வெளியேறி எனது சொந்த ஊரானதிண்டுக்கல்லுக்குச் சென்றேன். பின்னர் தமிழர் விடுதலைப் படை தலைவர் மாறன் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நான் காட்டுக்கு வந்தேன். அப்போது போலீஸார் என்னைக் கைது செய்தனர் என்றுவாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கிருஷ்ணமூர்த்தி நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்படுவார் என்று தனது அறிக்கையில்கூறியுள்ளார் பாலச்சந்திரன்.
முன்னதாக, முதலில் வீரப்பனின் வலது கரமாக விளங்கிய மாறன் கைது செய்யப்பட்டார். அதற்குப் பிறகுசேத்துக்குளி கோவிந்தன் கைது செய்யப்பட்டார் என்று வதந்தி பரவியது. அந்தத் தகவலைப் போலீஸார் மறுத்தனர்.இதையடுத்து, வீரப்பனின் இன்னொரு கூட்டாளி சாரையன் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார் என்பதுநினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications