காளிமுத்து மீது குற்றப்பத்திரிக்கை
சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், அதிமுக அவைத்தலைவருமான காளிமுத்துவை அலைக்கழித்து வந்த ராபின்மெயின் வழக்கில் அவர் மீது சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது.
முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆர் காலத்தில் தமிழகத்தை உலுக்கிய இவ்வழக்கில், முன்னாள் அமைச்சர்காளிமுத்துவின் நெருங்கிய நண்பரான ராபின் மெயின் என்பவர் வெளிமாநிலத்தில் பதிவு செய்யப்பட்டவாகனங்களை, தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகளின் உதவியுடன் தமிழக வாகனங்களாக காட்டிவங்கிகளில் கடன் பெற்றுள்ளார். இந்த வகையில் பல்வேறு வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பு 56 லட்ச ரூபாய் எனசி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னாள் அமைச்சர் காளிமுத்துவும் உடந்தை எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரிக்கதடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது. அதனை தொடர்ந்து சென்னை முதன்மை சி.பி.ஐ.நீதிமன்றத்தில் இக்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போது தான் குற்றவாளி இல்லை என காளிமுத்துகூறினார்.
முன்னதாக இந்த வழக்கிலிருந்து அரசு நடவடிக்கைகளை தவிர்க்க அ.தி.மு.க.விலிருந்து 1989 ல் தி.மு.க. ஆட்சிவந்ததும் தி.மு.க.விற்கு தாவினார் காளிமுத்து.
பின்னர், 1991ல் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதும், மீண்டும் அ.தி.மு.க.விற்கு தாவியவருக்குமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடைக்கலம் கொடுத்து அ.தி.மு.க. நிர்வாகியாக நியமித்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications