காதல் மணம்புரிந்த புதுப்பெண் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கோவை;
காதல் திருமணம் செய்து கொண்ட இரு மாதங்களில், போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் மருமகள் தீக்குளித்துதற்கொலை செய்து கொண்டார்.
கோவை போலீஸ் பயிற்சிப் பள்ளி சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் அண்ணாதுரை. இவரது மகன் ஸ்ரீராம் (22),என்பவரும் அஸ்வினி (19) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் தம்பதியினர் இருவருக்கும் கருத்து வேறுபாடுஏற்பட்டது. இதனால் அஸ்வினி மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். குளியல் அறையில்மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதில் உடல் கருகிய நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைபலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications