ஜம்மு: தீவிரவாதிகள் சுட்டதில் 15 போலீசார் சாவு

Subscribe to Oneindia Tamil

ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்திலுள்ள மன்ஞாகோட் கிராமத்தில் தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 15 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து ஜம்மு போலீஸ் டைரக்டர் ஜெனரல் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:

ராஜோரி மாவட்டத்தில் உள்ள காராபான் காட்டுப்பகுதிக்குச் சென்று விட்டுத் திரும்புகையில் 20 போலீசாரை, தீவிரவாதிகள் தாக்கினர்.

மாலை சுமார் 5 மணிக்கு போலீசார் தங்களது ஜீப்பில் காட்டுப் பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்த போது, தீவிரவாதிகள் கிரானைடு வெடிகுண்டுகளைபோலீஸ் வாகனத்தின் மீது வீசினர். மேலும் துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டனர்.

இதை சற்றும் எதிர்பாராத போலீசார் 10 பேர் ஜீப்பில் இருந்த படியே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 போலீஸ்காரர்கள் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். ஜீப் சின்னாபின்னமாக உடைந்து நொறுங்கியது.

மேலும் காயமடைந்த போலீஸ்காரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இதையடுத்து, தீவிரவாதிகளைத் தேடும் பணியில் போலீஸார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். ஆனால் இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளதீவிரவாதிகள் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்றார்.

ராணுவ அதிகாரி சாவு:

முன்னதாக, அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள ஜங்லாட் மான்டி பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாதிகளால், மூத்த ராணுவஅதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அப்போது ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்கள், ஒரு தீவிரவாதி ஆகியோர்உயிரிழந்தனர்.

இந்தத் துப்பாக்கிச் சண்டையில் பிரிகேடியர் பிக்ராம் சிங் மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+