சிறையில் கலாட்டா: 5 போலீசார் மீது நடவடிக்கை
கோவை:
சிறைவாசிகளிடமே "ரவுடித் தனம் செய்த 5 போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கோவை மத்திய சிறை பழமை வாய்ந்த சிறையாகும். இந்த சிறை இப்போது சீர்திருத்தக் கூடமாக மாறி வருகிறது. சிறையில் இருப்பவர்களும் நாட்டின்குடிமக்களாக கருதப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய சிறையில் கைதிகளை காண வரும் உறவினர்களிடம், கைதிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்ட 5 இரண்டாம் நிலைக்காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 1998ம் ஆண்டு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள்கடந்த சில காலமாக முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவலர் சக்திவேல் என்பவர் சுபாஷ் என்ற சிறைவாசியை நேர்காணலுக்கு வந்த அவரது தங்கையிடம் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார்.
இதே போல் செந்தில்குமார் மற்றும் சி. செந்தில்குமார் ஆகிய இரண்டு போலீசார் சிறைவாசி தங்கம் என்பவரைத் தாக்கியுள்ளனர். எஸ்.வடிவேல்,முத்துப் பாண்டி என்ற இரு காவலர்களும், ஏ வகுப்பு சிறையில் இருக்கும் ஸ்ரீதரன் என்பவரிடம் தரக் குறைவாக நடந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் ஏனைய காவலர்களையும் அழைத்துச் சென்று ரவுடிகளைப் போல செயல்பட்டு சிறைவாசிகளைத் தாக்கியுள்ளனர். இவர்கள் மீது உரிய இலாகாபூர்வமாக நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications