காங்கிரசால் வந்த வினை!
சென்னை:
ஜெயலலிதா ஹைதராபாதிலிருந்து திரும்பி வந்து இறுதி முடிவு நாளைஅறிவிக்கப்படும் என கூறிய போதே அவர் த.மா.காவை கூட்டணியை விட்டுவிலக்குவதாக முடிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.
திங்கள்கிழமை மதியம் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீரமணியும், தமிழ் நாடுசமூக நீதிகட்சி தலைவர் ஜெகவீரபாண்டியனும் மூப்பனாரை சந்தித்து காங்கிரசுடன்கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பவில்லை. த.மா.கா. தனித்து வந்தால் கூட்டணிஅமைத்துக் கொள்ள ஜெயலலிதா தயாராக இருப்பதாக கூறினர்.
ஆனால் அப்போதும் மூப்பனார் அவசரமாக எந்த முடிவையும் எடுக்கவிரும்பவில்லை.
மூப்பனார் தனது கட்சியின் வளர்ச்சிக்கும், காங்கிரசுக்கு கொடுத்த வாக்குக்கும்இடையே மாட்டி தவித்துக் கொண்டிருந்தார்.
காங்கிரசை விட்டு த.மா.கா. தனியாக வந்தால் அதிக தொகுதிகள் கொடுக்க அதிமுகதயாராக இருப்பதாக தெரிகிறது. இதற்கு இன்னொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது.முதலிலேயே காங்கிரசுக்கு குறைந்த அளவு தொகுதிகளே ஒதுக்கப்படும் எனஜெயலலிதா கூறியிருந்தார்.
அதற்கு காரணம் குறைந்த அளவு தொகுதிகளை ஏற்காமல் காங்கிரஸ் தானாகவேகூட்டணியைவிட்டு விலகும் என்ற எண்ணத்தில்தான் என கூறப்படுகிறது
த.மா.கா. உறுப்பினர்கள் பலரும் கட்சியின் வளர்ச்சியே முக்கியம். ஜெயலலிதாத.மா.கா.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விருப்பமாகத்தான் உள்ளார்.
காங்கிரசுடன் தான் அவர் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பவில்லை. எனவேகாங்கிரசிடமிருந்து பிரிந்தால் ஜெயலலிதா கூட்டணியில் த.மா.காவை சேர்த்துக்கொள்வார் என சிலர் கருதுகின்றனர்.
மதசார்பற்ற கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளை கலந்தாலோசிக்காமல் எவ்வாறுவிடுதலைப் புலி ஆதரவாளர்களான பா.ம.க.வை எ கூட்டணியில் சேர்த்துக்கொண்டார் என்பது குறித்து ஜெயலலிதா விளக்கமளிக்க வேண்டும் தமிழக காங்கிரஸ்கட்சி தலைவர் இளங்கோவன் கேட்டிருந்தார்.
இதற்கு ஜெயலலிதா விளக்கம் கூற மறுத்தார். இறுதியில் காங்கிரசுடன் சேர்ந்துபோட்டியிட போவதாக சொன்ன த.மா.கா.வையும் சேர்த்து தேர்தல்கூட்டணியிலிருந்து விலக்கி விட்டார்.
இத்தனை காலமாக பரபரப்புடன் இருந்து வந்த மூப்பனாரின் இல்லம் ஜெயலலிதாத.மா.கா., காங்கிரசுக்கு தேர்தல் கூட்டணியில் இடமில்லை என்று அறிவித்த பின்புகனத்த அமைதியுடன் இருக்கிறது.
காங்கிரஸ் அலுவலகத்தில் வித்தியாசமான நிலை நிலவி வருகிறது. இளங்கோவன்மூன்றாவது அணி அமைப்பதில் ஆர்வமாக இருக்கிறார். அவர் மீண்டும் பா.ம.க.வைமதசார்பற்ற கூட்டணியில் இணைத்தது குறித்து ஜெயலலிதா விளக்கமளிக்க வேண்டும்என கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னர் காங்கிரசும். த.மா.கா.வும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோம் எனகூறியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், பொதுச் செயலாளர்நல்லகண்ணு தலைைமையில் திங்கள்கிழமை மதியம் தொகுதி உடன்பாடு குறித்துபேச்சுவார்த்தை நடத்த சந்தித்தனர்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications