மெக்சிகோவில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
மெக்சிகோ:
மெக்சிகோவில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து, அரசு செய்தி நிறுவனம் நோட்டிமெக்ஸ் வெளியிட்டுள்ள செய்தி விவரம்:
மெக்சிகோவில் உள்ள குரரேரோவில் புதன்கிழமை அதிகாலை 5.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில்உயிர்ச்சேதம், பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓடினார்கள் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ம் தேதி 7.0 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலநடுக்கம்மெக்கோகான் என்ற இடத்தில் ஏற்பட்டது.
இதற்கிடையே, 1985 ம் ஆண்டு 7.5 மற்றும் 8.1 என்ற ரிக்டர் அளவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications