தி.மு.க. வில் புதுவை கண்ணன்
சென்னை:
பாண்டிச்சேரி முன்னாள் உள்துறை அமைச்சரும், புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கண்ணன்தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறார்.
கண்ணன் பாண்டிச்சேரியில் தமிழ் மாநில கட்சியிலிருந்து விலகி புதுவை மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் புதியகட்சியை தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் தமிழக முதல்வரும், தி.மு.க. கட்சி தலைவருமான கருணாநிதி பாண்டிச்சேரிக்கு சென்றிருந்த போது தான்தி.மு.க. தலைமையிலான அணியில் இணைந்து பாண்டிச்சேரி தேர்தலில் போட்டியிட இருப்பதாகதெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, கண்ணன் தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது கோபால புரம் இல்லத்தில் புதன்கிழமைசந்தித்து சுமார் 30 நிமிட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதன் பின் நிருபர்களிடம் கண்ணன் கூறுகையில், எங்கள் கட்சி தி.மு.க. எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும்ஏற்றுக் கொள்ளும். தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு எங்கள் கட்சி பாடுபடும்.
தி.மு.க.யாரை முதல்வராக அறிவித்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். பாண்டிச்சேரியின் முதல்வராகஜானகிராமன் இருந்தபோது நான் அவருடன் பணியாற்றி இருக்கிறேன் என்றார்.
இது குறித்து கருணாநிதி நிருபர்களிடம் கூறுகையில், புதுவை மக்கள் காங்கிரஸ் தி.மு.க. தலைமையிலானகூட்டணியில் இணைந்துள்ளது. தொகுதி பங்கீடு குறித்து அவருடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும்.
இடதுசாரி கட்சிகள் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணையுமா என்பது பற்றி இப்போது எதுவும் கூறமுடியாது. ஏனென்றால் தெளிவான நிலை காணப்படாததால் அது பற்றி கருத்து கூற முடியாது.
த.மா.கா. எந்த விதமான முடிவும் எடுக்காமல் இருக்கிறது .தி.மு.க. எதிரணியின் பலம் மற்றும் பலவீனம் பற்றிகவலைப்படாது. நாங்கள் எங்கள் கூட்டணியை பலப்படுத்துவதில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்என்றார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications