பாட்சாவுக்கு சிறை: வெடிகுண்டு மிரட்டல்-கோவையில் தீவிர பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

கேள்வி - பதில்

அனைத்து அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் தேர்தல் குறித்து சீரியசாக முயற்சித்துக் கொண்டிருக்கும் போது, மூப்பனாருக்கும மட்டும் இன்னும் தேர்தல் மூடு வராமலிருப்பது பற்றி ... ? இதற்குப் பெயர்தான் நிதானமா?

ப: மற்ற தலைவர்கள் எல்லாம் என்ன சீரியசாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்? வாழப்பாடியும், ராமதாசும் தங்களிடையே ஏற்பட்ட சூடு தணிந்துவிடமால் இருக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த சூட்டில் குளிர்காய முடியும் என்று நினைத்து, அதை ஆரம்பித்து வைத்த தி.மு.க. இப்போது அதை அணைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

ஜாதிக்கட்சிகள் நாங்கள் இல்லாமல் ஆட்சி இல்லை என்று சொல்லி, ஒரு சீட் , ஒன்றரை சீட் கிடைக்குமா என்று முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

அ.தி.மு.க என்ன முயற்சித்துக் கொண்டிருக்கிறது என்பது ஜெயலலிதாவுக்குத்தான் தெரியும். இந்த மாதிரி மூப்பனார் ஏதாவது செய்திருக்க வேண்டும்என்கிறீர்களா? அவருடைய அணுகு முறைக்குப் பெயர் நிதானமோ, இல்லையோ - அது அனுபவம்.

கே: மதச்சார்பற்ற அணி என்றும், தமிழகத்தில் மதச்சார்பற்ற ஆட்சி அமைப்போம் என்றும் தினம் தினம் கூக்குரல் இடும் தலைவர்கள் மதவாதகட்சியான முஸ்லீம் லீகின் மாநாட்டில் கலந்து கொண்டது பற்றி ...?

ப: ஹிந்து மத எதிர்ப்புதான் மதச் சார்பின்மையே தவிர, முஸ்லிம் மத உறவில் எந்தத் தவறும் இல்லை மதச்சார்ரின்மையின் இந்த அடிப்படை உண்மையைப்புரிந்து கொள்ளாமல் கேள்வி கேட்கிறீர்களே?

கே: அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகளை நிரூபித்தால், பதவியிலிருந்து மட்டுமல்ல: அரசியிலிலருந்தே விலகி விடுவோம் என்று கூறுகிறாரேஆற்காடு வீராசாமி! இது பற்றி ...?

ப: ஆட்சியில் இருந்தால் இதுதான் வசதி, தைரியமாக சவால் விடலாம். மத்திய ஆட்சியிலும் பங்கு இருப்பதால், என்ன விசாரணை நடத்தி, யார் வழக்குப்போடுவது? இந்த லட்சணத்தில் நிரூபணம் எங்கிருந்து வரும்?.

கே: விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பு - இவற்றில் வெற்றிக்கு எது முக்கியம்?

ப:வெற்றிக்கு இவற்றில் ஒன்று போதும் என்று நீங்கள் தீர்மானித்து விட்டீர்கள். அதற்கு பிறகு உங்களிடம் பேசி என்ன பயன்?

கே: நீங்கள் ஜெயலலிதாவை, அவரது சரிவிலிருந்து காக்க முயல்வதற்கு, உங்கள் ஜாதிய உணர்வுதான் காரணம் என்று கூறப்படுவது பற்றி ...?

ப: ஜெயலலிதா எந்த அளவு சரிந்திருக்கிறார் என்பதும், நான் அவரை காக்க முயற்சிக்கிறேனா என்பதும் ஒரு புறம் இருக்கட்டும்.

ஒரு விஷயத்தை நீங்கள் தெளிவுபடுத்தி விட்டால் நல்லது. முன்பு ஜெயலலிதாவை நான் எதிர்த்ததற்கும், கருணாநிதியை நான் ஆதரித்ததற்கும் கூட, இதே ஜாதியஉணர்வதான் காரணமா?

கே: தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு 60 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக, தமிழக பா.ஜ.க.தலைவர் கிருபாநிதி கூறியிருப்பது பற்றி ...?

ப: 6.0 என்று சொல்லியிருப்பார். பத்திரிக்கைகளில் இது தவறாக 60 என்று அச்சாகி இருக்கும்.

கே: தற்போதைய தி.மு.க. அரசின் சாதனை என்ன?

ப: தங்களுடைய முந்தைய அரசின் அளவுக்கோ அல்லது சென்ற அ.தி.மு.க. அரசின் அளவுக்கோ மக்களிடம் கெட்ட பெயர் வாங்காதது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+