விழாவில் பேசும்போது வந்த உத்தரவு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் கூட்டுறவு வீடு கட்டும் சங்க வணிக வளாக புதிய கட்டிட திறப்பு விழாவில் அமைச்சர் முல்லைவேந்தன் பேசிக் கொண்டிருந்த போது அவருக்குராஜினாமா உத்தரவு கிடைத்தது.
தலைமைச் செயலக செய்தித்துறை பி.ஆர்.ஓ. மூலம் முல்லைவேந்தனுக்கு ராஜினாமா உத்தரவு அனுப்பப்பட்டது.
ராஜினாமா உத்தரவைப் படித்ததும், அதிர்ச்சியடைந்த முல்லைவேந்தன் பேசுகையில், நான் கலந்து கொள்ளும் கடைசி விழா இது. நான் விரைவில் பேச்சைமுடிப்பதற்கான காரணம் குறித்து நீங்கள் பின்னர் தெரிந்து கொள்வீர்கள்.
நான் நிரபராதி. நிரபராதிகள் குற்றவாளிகளாக்கப்படுவதுதான் இன்றைய நிலை. என்னை அமைச்சராக்கிய முதல்வர் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும்நன்றி. இதே போல் மாவட்ட வளர்ச்சிக்கு கடந்த 5 ஆண்டுகளாக உதவிய அனைவருக்கும் எனது நன்றி என்று கூறி விட்டுப் புறப்பட்டார்.
பின்னர் கிருஷ்ணகிரி விருந்தினர் விடுதிக்குச் சென்று, அரசு சார்பில் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த கார்களையும், பாதுகாப்பு அதிகாரிகளையும் மாவட்டகலெக்டர் பொறுப்பில் உடனடியாக ஒப்படைத்தார். (ரொம்ப நியாயமானவராம்!).
முல்லைவேந்தனின் அரசு விழாக்கள் ரத்து:
முல்லைவேந்தனுக்கு ராஜினாமா உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து அவர் வெள்ளிக்கிழமை கலந்து கொள்ளவிருந்த அரசு விழாக்கள் அனைத்தும்ரத்து செய்யப்பட்டன.
முதல்வர் உத்தரவு:
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தர்மபுரியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை பயணியர் விடுதியில் செய்தித்துறை அமைச்சர் முல்லைவேந்தன் முன்னிலையில்,அறநிலையத்துறை உதவி ஆணையாளர் அன்புமணி என்பவர் தாக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.
இதுகுறித்து விசாரித்துத் தெரிவிக்குமாறு மாநில குற்றப் புலனாய்வுப் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தேன். விசாரணை முடிவில் தவறு செய்தவர்கள்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தேன்.
அதன்படி எனக்குக் கிடைக்கப் பெற்ற (வியாழக்கிழமை) விசாரணை அறிக்கையின்படி, அன்புமணி மீதான தாக்குதலுக்கு முல்லைவேந்தன்காரணமாக இருந்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் மற்றொரு அமைச்சரின் துறையில் (அறநிலையத்துறை) தலையிட்டு அத்துறை சார்பில்நடக்கவிருந்த நில ஏலத்தையும் தடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
எனவே உடனடியாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு முல்லைவேந்தனுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications