ஸ்டாலினின் ஊட்டி பயணம் ரத்து
கோவை:
தந்தை கருணாநிதியுடன் சேர்ந்து தமிழக தேர்தல் கூட்டணி தொடர்பாக பல்வேறு கட்சியின் தலைவர்களை சந்தித்து வரும் மு.க.ஸ்டாலின் தனது நீலகிரி மாவட்ட சுற்றுப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
முதலில் தனித்து விடப்பட்ட த.மா.கா-காங்கிரஸ் இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இடம் பிடிக்க உள்ளதால், தி.மு.கவும்தனது தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளது. முடிந்தவரை பல கட்சிகளையும் வளைத்துப் போடும்முயற்சியில் அக் கட்சி ஈடுபட்டுள்ளது.
இதில் தந்தை கருணாநிதிக்கு சென்னை மாநகர மேயர் ஸ்டாலின் பெரிதும் உதவி வருகிறார்.
நீலகிரி மாவட்டத்தில் மு.க ஸ்டாலின் 3 நாள் சுற்றுப் பயணம் செய்ய முடிவு செய்திருந்தார். இதன்படி அவர் சனிக்கிழமையன்று(மார்ச் 10), காலை நீலகிரி எக்ஸ்பிரஸ் மூலம் கோவை வருவதாக இருந்தது.
கோவையில் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி செல்ல முடிவு செய்திருந்தார். நீலகிரிமாவட்டத்தில் 3 நாள் சுற்றுப் பயண நிகழ்ச்சி இருந்தது.
ஆனால், தலைநகர் சென்னையில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவரது பயணம் ரத்துசெய்யப்பட்டது.
முதல்வர் கருணாநிதி, சில முக்கிய அரசியல் ஆலோசனைகளுக்கு ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதன்படிஅவரது சுற்றுப் பயணத்தை ரத்து செய்தது கூட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications