மதுரையில் ப.சிதம்பரம் கொடும்பாவி எரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதுரையில் தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்தியநிதியமைச்சருமான ப.சிதம்பரத்தைக் கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸார்கொடும்பாவி எரித்துப் போராட்டம் நடத்தினர்.

அதிமுகவுடன், தமாகா கூட்டணி வைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து ப.சிதம்பரம்அறிக்கை வெளியிட்டுள்ளார். இது அக்கட்சிக்குள் பெரும் கொந்தளிப்பைஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலுள்ள அக்கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில்திங்கள்கிழமை கட்சியினர் ப.சிதம்பரத்திற்கு எதிராக கோஷமிட்டு போஸ்டர்களைக்கொளுத்திப் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் மதுரைக்கும் இந்தப் போராட்டம் பரவியது. மதுரை தமிழ் மாநிலகாங்கிரஸின் அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. கட்சித் தலைவர்மலைச்சாமி, முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, வெளியில் த.மா.கா கவுன்சிலர் சரவணன்தலைமையில் சிலர் கூடி, ப.சிதம்பரத்திற்கு எதிராக கோஷமிட்டனர். சிலர்கொடும்பாவியைக் கொளுத்தினர். இதனால் த.மா.கா அலுவலகம் உள்ள காமராஜர்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த போலீஸார் சரவணன் உள்பட 11 பேரைக் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+