கருணாநிதிக்கு ஆதரவு .. ப.சிதம்பரம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் துவக்கியுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை அமைப்பு திமுக கூட்டணியை ஆதரித்து வரும் சட்டசபைத்தேர்தலில் பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

அதிமுகவுடன், தமாகா கூட்டணி வைத்துக் கொண்டதற்கு ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மூப்பனாருக்கு அவர் அறிக்கைமூலம் விளக்கம் கேட்டார்.

ஆனால் மூப்பனார் பதில் ஏதும் சொல்லாததால், கூட்டணியை எதிர்த்து பிரசாரம் செய்ய தமாகா ஜனநாயகப் பேரவை என்ற அமைப்பை சிதம்பரம்துவக்கினார். தேர்தல் வரைதான் இந்த அமைப்பு இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

தான் மற்றும் ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிடுவோமா என்பதை விரைவில் அறிவிப்பதாகவும் சிதம்பரம் கூறியிருந்தார். இந்த நிலையில், திமுகதலைவரும், முதல்வருமான கருணாநிதியை சனிக்கிழமை மாலை அண்ணா அறிவாலயம் சென்று சந்தித்தார் சிதம்பரம்.

கருணாநிதியைச் சந்திக்க வந்த சிதம்பரத்தை சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் வாசலில் நின்று வரவேற்று அழைத்துச் சென்றார். சிதம்பரத்துடன்எம்.எல்.ஏக்கள் புரசைவாக்கம் ரங்கநாதன், காரைக்குடி சுந்தரம் ஆகியோர் வந்தனர்.

கருணாநிதியைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் சிதம்பரம் பேசுகையில், வரும் தேர்தலில் தமாகா, அதிமுக வேட்பாளர்களை எதிர்த்துப் பிரசாரம் செய்யப்போகிறேன்.

அப்போது திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் கூறப் போகிறேன் என்ற செய்தியை முதல்வரிடம்தெரிவிக்கவே வந்தேன்.

இந்தத் தேர்தலில் எனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவார்கள். அதுகுறித்துப் போகப் போகத்தான் தெரியும் என்றார்சிதம்பரம்.

பின்னர் கருணாநிதியை நிருபர்கள் சந்தித்தபோது, எங்களது கூட்டணிக்கு ஆதரவு தருவதாக சிதம்பரம் கூறினார். சந்தோஷம் என்று கூறி வரவேற்றேன்.

அவரது ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படுமா என்பதை கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவு செய்யப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+