புலிகளின் தலைமை அலுவலகம் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கம் தனது லண்டன் அலுவலகத்தை இலங்கையின் வன்னிப் பகுதிக்கு மாற்றிக் கொண்டது.

கடந்த பிப்ரவரியில் இங்கிலாந்து அரசு கொண்டு வந்த தீவிரவாத இயக்கங்கள் தடைச் சட்டத்தின் கீழ் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது.

இதனால், லண்டனில் செயல்பட்டு வந்த புலிகளின் தலைமையகம் தனது அலுவலகத்தை புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை வன்னிப் பகுதிக்குமாற்றப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து விதித்துள்ள தடையால் அங்கு இனிமேல் புலிகள் நிதி திரட்டவோ, மற்ற இயக்க பணிகளையோ மேற்கொள்ள முடியாது. லண்டனில் இருந்ததலைமை அலுவலகத்தை தென் ஆப்பிரிக்கா அல்லது நார்வே நாட்டிற்கு மாற்ற திட்டமிட்டது.

பின்னர் அத்திட்டத்தை கைவிட்டு வன்னிப் பகுதிக்கு அலுவலகத்தை மாற்றியது. லண்டன் அலுவலகம் இருந்த கட்டிடம் இனிமேல் தமிழ் இளைஞர்கள் தங்கும்விடுதியாகச் செயல்பட உள்ளது.

புலித்தலைவர் இருக்கும் வன்னிப் பகுதியிலேயே அலுவலகத்தை அமைத்து இருப்பதன் மூலம் தங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என புலிகள்கருதுகின்றனர்.

இங்கிலாந்து அரசின் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான காரணங்களை தேடும் முயற்சியில் புலிகள் ஈடுபட்டு உள்ளனர்.

புலிகளுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து பெறப்பட்ட இத்தகவல்களை சன்டே லீடர் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+