பிரபாகரனை சந்திக்க நார்வே மீண்டும் முயற்சி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் 17 ஆண்டுகளாக நடந்து வரும் இனப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தைநடத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம்.

இதுகுறித்து தலைநகர் கொழும்பில் வெளியாகும் சன்டே அப்சர்வர் பத்திரிக்கையில் வெளியான செய்தி:

நார்வே தூதுக்குழுத் தலைவர் எர்க் சோல்ஹெம் விரைவில் கொழும்பு சென்று புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்திக்கலாம். எரிக் சோல்ஹெம்தலைமையில் நார்வே தூதுக்குழுவினர் விரைவில் பிரபாகரனைச் சந்திக்கலாம் என்றும் தெரிகிறது.

ஏற்கனவே பிரபாகரன் தலைமறைவாக இருக்கும் வன்னி பகுதியில் நார்வே தூதுக்குழுத் தலைவர் சோல்ஹெம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்என்பது நினைவிருக்கலாம்.

இதைத் தொடர்ந்து நார்வே தூதுக்குழுவுக்கு புலிகள் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். நார்வே தூதுக்குழுவினர் ஏற்கனவே இலங்கை அரசையும் சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.

இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று ஒத்துக் கொண்டாலும் இதுவரை பேச்சுவார்த்தை ஆரம்பமாகும்அறிகுறியே தென்படவில்லை.

இதைத்தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தையை ஏற்படுத்தும் முயற்சியில் முழுமூச்சாகக் களம் இறங்கியுள்ளார் நார்வே தூதுக்குழுத் தலைவர்.

இதற்கிடையே, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் ராணுவ வீரர்களுக்குத் தேவையான மருந்துப்பொருட்கள், உணவுப் பொட்டலங்கள், குடிநீர் போன்றவை கிடைக்கவில்லை எனறும் தெரிய வந்துள்ளது.

இதனால், இலங்கை அரசு ராணுவ வீரர்களுக்கு உடனடியாக தேவையான அடிப்படை வசதிகள், உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் சோல்ஹெம்.

இவ்வாறு சன்டே அப்சர்வர் பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+