வள்ளுவர் கோவிலுக்கு 21-ம் தேதி கும்பாபிஷேகம்
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவில் கும்பாபிஷேகம் 21-ம் தேதி காலை நடக்கிறது.
திருக்குறள் எழுதி புகழ் பெற்ற திருவள்ளுவர் மயிலாப்பூரில் பிறந்தார் என்று ஒரு வரலாறு உள்ளது. வள்ளுவர்,கன்னியாகுமரியில் பிறந்தவர் என்றும் ஒரு கருத்து உள்ளது.
மயிலாப்பூரில் திருவள்ளுவருக்குக் கோவில் உள்ளது. இந்தக் கோவிலைக் கட்டியது காசி அரசன் என்ற மன்னன்.சுமார் 400 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது இந்தக் கோவில்.
இந்தக் கோவிலின் உள்ளே வள்ளுவர் பிறந்ததாக கருதப்படும் இடத்தில் இலுப்பை மரம் உள்ளது. அதன்அடிப்பாகம் செப்புத் தகடு போர்த்தி இன்றும் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பழமையான இந்தக் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டது.இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி மாநில அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன்ரூ. 5.6 லட்சம் மதிப்பிலான திருப்பணிகளைத் துவக்கி வைத்தார்.
இதில் ரூ. 3 லட்சம் மதிப்பில் முதல் கட்டப் பணிகள் முடிந்துள்ளன. திருவள்ளுவர், வாசுகியம்மன் கோவில்விமானங்கள், ஏகாம்பரேஸ்வர் காமாட்சியம்மன் கோவில் விமானங்கள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளன.பணிகள் முடிவுற்றள்ளதையடுத்து, 21-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
காலை 11.30 மணிக்கு இந்த விழா நடக்கும். அதற்கு ன் 19-ம் தேதி திங்கள்கிழமை 20 சிவாச்சாரியார்கள்தலைமையில் வேத பாராயணம், திருறை பாராயணம் ஆகியவை நடத்தப்படும்.
நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன், மயிலாப்பூர் எம்.எல்.ஏ. ந.பூ.ராமஜெயம் உள்ளிட்டபலர் கலந்து கொள்கின்றனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications