ராஜினாமாவை வாபஸ் பெற்ற 3 அமைச்சர்கள்
டெல்லி:
ஆயுதப் பேர ஊழல் குற்றச்சாட்டுக்குப் பொறுப்பேற்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ்ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவரது கட்சியான சமதா கட்சியைச் சேர்ந்த 3 அமைச்சர்கள் தங்களதுராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
ராஜினாமா செய்த மத்திய விவசாயத்துறை அமைச்சர் நிதிஷ்குமார், ரயில்வேத்துறை இணை அமைச்சர் திக் விஜய்சிங், நுகர்வோர் விவகாரத்துறை இணை அமைச்சர் சீனிவாசப் பிரசாத் ஆகியோர் தங்கள் ராஜினாமாவை வாபஸ்பெறுவதாக அறிவித்துள்ளனர். இவர்கள் 3 பேரும் சமதா கட்சியைச் சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து சமதா கட்சி நிறுவனத் தலைவர் ஜார்ஜ் பெர்னான்டஸ் திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறுகையில்,
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலக வேண்டாம் என்றும், தங்களது பதவிகளை ராஜினாமா செய்யவேண்டாம் என்றும் சமதா கட்சியைச் சேர்ந்த 3 அமைச்சர்களுக்கும் கூறப்பட்டது.
இதுகுறித்தான ஆலோசனையும் நடத்தப்பட்டது. அவர்களிடம் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்துத்தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது. இதையடுத்து அவர்கள், தங்கள் ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டுதேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ஜார்ஜ் பெர்னான்டஸ் கூறினார்.
முன்னதாக, டெஹல்கா டாட் காம் இணையதளம் அம்பலப்படுத்திய ஆயுதப் பேர ஊழல் குற்றச்சாட்டைத்தொடர்ந்து சமதா கட்சி நிறுவனத் தலைவர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ராஜினாமா செய்தார். இதையடுத்து மார்ச் 15 ம்தேதி சமதா கட்சியைச் சேர்ந்த 3 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications