கிணற்றில் வீசி 3 குழந்தைகளைக் கொன்ற தாய்
ஈரோடு:
3 குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்ணை பொதுமக்கள் காப்பாற்றினர்.
ஈரோடு மாவட்டம், முளப்பாளையம், தொலைபேசி நகரில் வசித்து வருபவர் தர்மலிங்கம். இவரது மனைவிகந்தேஸ்வரி. தர்மலிங்கம் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளன.பாலகிருஷ்ணபிரபு (12). சங்கீதா (6), கார்த்தீஸ்வரன் (3), ஜோதிஸ்வரி (1) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கந்தேஸ்வரிக்கு மனநிலை பாதிப்படைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தைகளைகிணற்றில் வீசி விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள கிணற்றில் குதித்துள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம்கேட்ட பொதுமக்கள் கிணற்றுப் பக்கம் வந்தனர்.
அப்போது நான்கு பேரும் கிணற்றிற்குள் குதித்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தீயணைப்பு படையினருக்குபொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதேசமயம் அவர்களை மீட்க முயற்சியும் மேற்கொண்டனர். இதில்கந்தேஸ்வரியை மட்டும் பொதுமக்கள் உயிருடன் மீட்டனர். கந்தேஸ்வரி ஈரோடு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கிணற்றிற்குள் வீசப்பட்ட குழந்தைகள் சங்கீதா , கார்த்தீஸ்வரன், ஜோதீஸ்வரி ஆகியோரது உடலை தீயணைப்புபடையினர் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கப் பதிவு செய்து விசரணை செய்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications