20 லட்சம் ஓட்டு வேண்டுமா?
கோவை:
வருகிற சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்பவர்களுக்குத்தான் எங்கள் ஓட்டு என ஆர்ய வைஸ்ய சமாஜம் அறிவித்துள்ளது.
கோவையில், ஆர்ய வைஸ்ய சமாஜத்தின் தலைவர் கற்பகம் ராமதாஸ் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியதாவது:
எங்கள் ஆர்ய வைஸ்ய சமுதாயத்தினர், கோவை, ஈரோடு, சேலம், கோபி, கரூர்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, மதுரை உட்பட எல்லா இடங்களிலும் வியாபித்துள்ளனர்.
இவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டும். கோவை மேற்குத் தொகுதியில்வெற்றியை நிர்ணயிக்கும் ஓட்டின் அளவிற்கு எங்கள் இனத்தவர் உள்ளனர். பெரியகடை வீதி, வைசியாள் வீதி, பூமார்க்கெட் உட்பட பல பகுதிகளில் எங்கள் இனத்தவர்உள்ளனர்.
எங்கள் சமுதாயத்தினர் முற்பட்டோர் பட்டியலில் உள்ளனர். ஆனால் கல்வி, வேலைவாய்ப்பு, இன்ஜினியரிங், மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை பார்த்ததே இல்லை.
தொழில் அடிப்படையில் இவ்வளவு நாட்களாக தொடர்ந்துள்ளனர். பெரும்பாலும்நகை வியாபாரத்தில் இவர்கள் ஈடுபட்டிருந்ததால், ஆரம்பக் கல்வி மட்டுமே இவர்கள்கற்றுக் கொண்டுள்ளனர்.
படித்து பட்டம் பெற்றாலும், அரசு துறையில் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.எனவே எங்கள் இனத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அரசுவேலை வாய்ப்புகளில் சம அந்தஸ்து அளிக்க வேண்டும். கல்வி நிலையங்களில்எங்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
இத்தகைய கோரிக்கைகளை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கே எங்கள்ஓட்டு. ஏற்றுக் கொள்ளும் அரசியல் கட்சிக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகிடைக்கும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications