கூடுதல் தொகுதிகள் கேட்டு திமுகவுக்கு திருநாவுக்கரசு தலைவலி
சென்னை:
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எம்ஜிஆர் அதிமுகவுக்கு வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட 3தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் மேலும் தொகுதிகள் கிடைப்பதற்காக முயற்சி செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் எம்ஜிஆர் அதிமுக பொதுச்செயலாளர்எஸ்.திருநாவுக்கரசு கூறியதாவது:
வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட எங்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் தொகுதிகள்ஒதுக்குமாறு திமுக பொருளாளரும், தேர்தல் குழு தலைவருமான ஆர்க்காடு வீராசாமியிடம் வேண்டுகோள்விடுத்துள்ளேன்.
ஒதுக்கப்பட்டுள்ள 3 தொகுதிகள் தவிர எத்தனை சீட்டுக்கள் அதிகமாகத் தந்தாலும் அதை நாங்கள் வரவேற்போம்.
நாங்கள் முதலில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 சீட்டுக்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டோம்.ஏனெனில் நாங்கள் தொகுதிப் பங்கீடு விஷயத்தில் எவ்விதப் பிரச்சனையும் செய்ய விரும்பவில்லை.
நாங்கள் இடம்பெற்றுள்ள திமுக கூட்டணி மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்உள்ளது. திமுக கூட்டணி இந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதும், முதல்வர் கருணாநிதியேதொடர்ந்து முதல்வராக வேண்டும் என்பதும்தான் எங்களது விருப்பம்.
மதிமுக, திமுக கட்சிகளுக்கிடையே உள்ள பிரச்சனையில் நான் எதுவும் கருத்துக் கூற முடியாது. ஏனெனில்கருணாநிதியும், வைகோவும் அரசியலில் நன்கு அனுபவம் பெற்றவர்கள். அவர்களது பிரச்சனையில் நான்குறுக்கிட முடியாது என்றார் திருநாவுக்கரசு.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications