இன்று இந்தியா வருகிறார் கிளின்டன்
அகமதாபாத்:
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் புதன்கிழமை இந்தியா வருகிறார்.
அவர் குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுகிறார்.
கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி ஏற்பட்ட கடும் பூகம்பத்தில் குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதி கடுமையாகபாதிக்கப்பட்டது. அந்த கொடூரமான பூகம்பத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பலியானார்கள்.பல்லாயிரக்கணக்கானோர் வீடு உடைமைகளை இழந்து தவித்தனர்.
முன்னாள் அமெரிக்க அதிபர் குஜராத் பூகம்ப பாதிப்பு பகுதிகளை பார்வையிடுவதற்காக இந்தியா வருகிறார். அவர்முதலில் குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தில் அஞ்சார் மாவட்டத்தில் இறந்து போன 100 பள்ளி குழந்தைகளின்பெற்றோரை பார்க்கவிருக்கிறார்.
இந்த 100 பள்ளி குழந்தைகளும் சிறிய பாதையில் குடியரசு தின அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த போது அந்தபகுதியின் இரு பக்கத்திலும் இருந்த வீடுகள் பூகம்பத்தால் சரிந்து விழுந்தன. இந்த குழந்தைகள் வீடுகளின்இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். அஞ்சார் பூஜ் பகுதியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
கிளின்டன் அமெரிக்க இந்திய அமைப்பின் பிரதிநிதிகுழுவை தலைவராக குஜராத் வருகிறார். இந்த அமைப்புகுஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட 100 கிராமங்களை தத்தெடுத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும்பணியில் ஈடுபடவிருக்கிறது.
தனது இந்திய பயணம் குறித்து கிளின்டன் கூறுகையில், நான் மீண்டும் இந்தியாவிற்கு வந்திருப்பது குஜராத்பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூறுவதற்கும், இன்னும் நிறைவடையாமல் இருக்கும்மீட்பு பணிகளை பார்வையிட்டு அவற்ரை நிறைவேற்றுவதற்காகவும் தான்.
அமெரிக்க இந்திய அமைப்பு தொண்டு நிறுவத்தினரையும், அரசு சார்ந்த நிறுவனங்களையும் சந்தித்துபேசவுள்ளேன். இது குஜார்த்தின் தற்போதைய மறுகட்டமைப்புக்கு மட்டுமல்ல சிறந்த வருங்காலகட்டமைப்பக்காகவும்தான் என்றார்.
இது குறித்து அமெரிக்க இந்திய அமைப்பின் பொருளாளர் பண்டாரி கூறுகையில், எங்கள் குழு இந்தியாவிற்குவந்திருப்பதன் நோக்கம் குஜராத் பூகம்ப பகுதிகளில் எடுக்கபப்ட்டுள்ள மீட்பு நடவடிக்கை பற்றி அறிவதும்,எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் உடனடி மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கான முயற்சிகளுக்குஏற்படுவதும்தான்.
கிளன்டன் பயண விவரங்கள் ரகசியமாக வைக்ப்பட்டிருந்தாலும், புதன்கிழமை டெல்லி வரும் கிளின்டன் நேராககட்ச் செல்வார். பூகம்ப பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட பின் புதன்கிழமை இரவு அகமதாபாத்தில்தங்கியிருப்பார்.
வியாழக்கிழமை தொண்டு நிறுவனங்கைளச் சேர்ந்தவர்களை சந்திப்பார். அதன் பின் மும்பை சென்று இந்தியாவின்முதன்மை தொழிலதிபர்களை சந்திக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது
இதற்கிடையில் கிளின்டன் குஜராத் முதல்வர் கேசு பாய் படேலையும், வேறு பல முக்கியத் தலைவர்களையும்சந்திக்கவிருக்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications