பா.ஜ.க.வுக்கு ஆதரவாக 21 தொகுதிகளில் ம.தி.மு.க. பிரசாரம்
கோவை:
பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக தனி மேடையில் 21 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வோம் என ம.தி.மு.கபொருளாளர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
கோவையில் திங்கள்கிழமை நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பிறகு நிருபர்களுக்கு ம.தி.மு.கபொருளாளரும், மத்திய மரபு சாரா எரிசக்தித் துறை இணை அமைச்சருமான கண்ணப்பன் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
இந்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் வருடப் பிறப்பன்று கோவையில் தேர்தல் எழுச்சி மாநாட்டை கோவையில்ம.தி.மு.க. நடத்துகிறது. இந்த இந்த மாநாட்டில் யார், யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் எனஅறிவிக்கப்படும். பாரதிய ஜனதாக் கட்சி போட்டியிடும் 21 தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகள் அனைத்திலும்ம.தி.மு.க வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது.
பாரதிய ஜனதாவிற்கு நாங்கள் தனி மேடை அமைத்து பிரசாரம் மேற்கொள்வோம். தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும், தி.மு.க வினருக்கும், எங்களுக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடால், ஒரேமேடையில் பேச முடியாத நிலை ஏற்படும் என்பதால் இந்த ஏற்பாடு செய்துள்ளோம்.
தி.மு.க.,வுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசியல்கட்சியினர் எங்களிடம் ஆதரவு கேட்டால், அதனை பரிசீலனை செய்வோம். சாதிக் கட்சிகளுக்கு நாங்கள்எந்தவிதத்திலும் ஆதரவளிக்க மாட்டோம்.
எங்களுக்கு பாஸ்வான் கட்சியான ஜனசக்தி, சரத்யாதவ் கட்சி, ஆகியவை ஆதரவளிக்க முன்வந்துள்ளன.
தி.மு.க. வை விமர்சனம் செய்து அவர்களது மனதைப் புண்படுத்த விரும்பவில்லை. தி.மு.கஅமைச்சரவையிலிருந்து விலகிய தமிழ்க்குடிமகன் அளித்துள்ள விளக்கமே போதுமானது என நினைக்கிறேன்.அ.தி.மு.க வின் ஊழலை மக்கள் நன்கு அறிவர். தி.மு.க ஆட்சி எப்படி இருந்தது என்பதையும் மக்கள்கண்டுள்ளனர். இந்த இரு ஆட்சிகளுக்கும் மாற்றாக அரசியலில் நேர்மையாகத் திகழும் ம.தி.மு.க. வை மக்கள்ஆட்சிக்குத் தேர்வு செய்வார்கள் என நம்புகிறேன்.
ம.தி.மு.க வைப் பொறுத்தவரை கடந்த 96ம் ஆண்டு தனித்துப் போட்டியிட்டபோது 20 ஆயிரம் ஓட்டிற்கு மேலாக30 தொகுதிகளிலும், 10 முதல் 20 ஆயிரம் ஓட்டுகளை 40 தொகுதிகளிலும், 5 ஆயிரம் ஓட்டும் அதற்கு கீழும் 60தொகுதிகளிலும் பெற்றுள்ளோம் என்றார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தவெகவுக்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. விஜய்யை சந்தித்த பின் துரை வைகோ பரபர பேட்டி -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications