அதிமுகவில் சேரமாட்டேன்: டி.ராஜேந்தர்
மயிலாடுதுறை:
தேர்தலில் சீட் இல்லை என்பதற்காக அதிமுகவில் போய் சேர மாட்டேன் என திமுகவின் கொள்கை பரப்புசெயலாளரான நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
திமுகவில் சீட் கிடைக்காததால் கருணாநிதியின் அரவணைப்பில் இருந்த பேராசிரியர் தமிழ்க்குடிமகன் திமுகவில்இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்து விட்டார்.
அதே போல், நடிகர் டி.ராஜேந்தருக்கும் அவருடைய பூங்கா நகர் தொகுதி கிடைக்காது என அரசியல் வட்டாரங்கள்தெரிவித்ததால் அவரும் அதிமுகவில் இணைவார் என பேச்சு அடிபட்டது.
தனது பாட்டி மறைவிற்காக மயிலாடுதுறை வந்த டி.ராஜேந்தரை நிருபர்கள் சந்தித்து இது பற்றி கேட்டனர்.அப்போது அவர் தெரிவித்த தகவல்கள்:
அதிமுகவில் நான் சேரப் போவதாக வந்த தகவல்கள் தவறானவை. அமைச்சர் தமிழ்க்குடிமகன் அதிமுகவில்சேர்ந்தது குறித்து தலைவர் கருணாநிதி தெளிவாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.
தேர்தலுக்காக வாழ்பவன் அல்ல டி.ராஜேந்தர். வாழ்க்கை பயணத்தில் தேர்தல் ஒரு சந்திப்பு. தேர்தலேவாழ்க்கையாகி விடாது. பூங்கா நகர் மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளில் எனக்கு சீட் கேட்டு நண்பர்கள் பணம்கட்டியுள்ளனர்.
இது தொடர்பாக திமுக தலைமை எடுக்கும் முடிவிற்கு நான் கட்டுப்படுவேன். கடமை, கண்ணியம், கட்டுப்பாடுஆகியவற்றோடு இருக்கும் நான் மக்கள் அளிக்கும் தீர்ப்பை மகேசனின் தீர்ப்பாக ஏற்பேன்.
தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்படுவது வழக்கம். இதற்காக மதிமுக கட்சி திமுக கூட்டணியைவிட்டு வெளியேறியது வருத்தமானது.
கூட்டணி என்பது அரசியல் கட்சிகளுக்கு ஆயுதம். அதுவே தேர்தலில் ஜெயிக்க காரணமாகி விடாது. மக்களின்மனநிலையை பொறுத்து கூட்டணிகள் வெற்றி பெறும்.
தனிப்பட்ட முறையில் திமுகவிற்கு என்று ஒரு வாக்கு வங்கி உண்டு என்பது கடந்த கால தேர்தல்களில்நிரூபிக்கப்பட்ட உண்மை.
தேர்தலில் போட்டியிட பல்வேறு ஜாதி கட்சிகள் உருவாகியுள்ளது திடீரென நடந்த ஒரு நிகழ்ச்சி அல்ல. கடந்தகாலங்களில் ஒரு புள்ளியாக ஆரம்பித்து இன்றைக்கு இந்தளவிற்கு வளர்ந்துள்ளது.
நாட்டிற்கும், அரசியலிற்கும் ஜாதிக்கட்சி நல்லதல்ல என சமுதாயத்தில் அக்கறை உள்ள அனைவரும் வருத்தத்துடன்கூறுகின்றனர். இப்பிரச்சனைக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்றார் டி.ராஜேந்தர்.
-
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications