3 வது அணி அமைக்கிறார் வைகோ
சென்னை:
திமுக கூட்டணியிலிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட வைகோ, வரும் சட்டசபைத் தேர்தலில் 3 வது அணிஅமைத்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியை சந்தித்து எங்களது நிலையையும், பிரச்சனையையும் எடுத்துக்கூறினேன். சமரச முயற்சி எதையும் பாஜக மேற்கொள்ள வேண்டாம் என்றும் அவரிடம் கூறினேன்.
1993 ம் ஆண்டு கருணாநிதியை கொலை செய்ய மதிமுக முயல்கிறது என்று கொலைப்பழி சுமத்தி எங்களைவெளியேற்றினார்கள். இப்போது பொய்ப்பழி சுமத்தி எங்களை வெளியேற்றியுள்ளார்கள். திமுககூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் நாங்கள் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எஃகு போல்உறுதியாக தொடர்ந்து நீடிப்போம்.
வா என்றால் வருவதற்கும் போ என்றால் போவதற்கும் மதிமுக எடுபிடி கட்சி அல்ல. தன்மானமுள்ள,சுயமரியாதை உள்ள கட்சியாகும் மதிமுக.
லட்சியத்தில் உறுதி, அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை ஆகிய மூன்று கொள்கைகளை அடிப்படையாகவைத்து ஆரம்பிக்கப்பட்டதுதான் மதிமுக.
தன்மானத்துக்கு இழுக்கு வரும்போது மதிமுக ஒருபோதும் சும்மா இருக்காது.
தமாகாவுக்கு 40 சீட்டுக்களும் அதற்கு அதிகமாகவும் கொடுக்கத் தீர்மானித்திருந்தார் திமுக தலைவர் கருணாநிதி.ஆனால் அவர்களோ அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளனர். தமாகாவை கூட்டணிக்குஅழைக்கிறோம் என்பது குறித்து எங்களிடம் ஒரு வார்த்தை கூட கூறவில்லை.
மிகப்பெரிய ஊழல் புரிந்த ஒரு கட்சியை தங்கள் கூட்டணியில் வைத்துக் கொண்டுள்ளனர் திமுகவினர்.
தெஹல்கா டாட் காம் இணைய தளம் வெளிக்கொண்டு வந்த ஆயுதப்பேர ஊழலுக்குக் கண்டனம் தெரிவித்துபாஜக டெல்லியில் நடத்திய ஊர்வலத்தில் முதல்வர் கருணாநிதி கலந்துகொள்ளவில்லை.
முரசொலி மாறனாவது கலந்து கொண்டிருக்கலாம். அவரும் கலந்து கொள்ளவில்லை. அதற்கு சரியான காரணம்கூறப்படவில்லை.
வரும் 14 ம் தேதி கோவையில் மதிமுக சார்பாக தேர்தல் சிறப்பு மாநாடு நடக்கிறது. நாங்கள் அமைக்கவுள்ள 3 வதுஅணியில் புதிய கட்சிகள் சேரும் வாய்ப்பு உள்ளது.
தன்னம்பிக்கையுடன் மக்களைச் சந்தித்து ஓட்டு கேட்போம். பாஜக போட்டியிடும் 21 தொகுதிகளைத் தவிர மதிமுக213 தொகுதிகளில் போட்டியிடும் என்றார் வைகோ.
1996 ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மதிமுக தலைமையில் 3 வது அணி அமைந்தது. அப்போது ஜனதா தளம்,மார்க்சிஸ்ட் கட்சிகள் மதிமுகவுடன் இருந்தன.
தற்போது 3 வது அமைப்பதாக வைகோ அறிவித்துள்ளார். இப்போது மார்க்சிஸ்ட் அதிமுக கூட்டணியில் உள்ளது.ஜனதா தளம் எந்தக் கூட்டணியிலும் சேராமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications