சொந்த சின்னத்தில் மட்டுமே போட்டியிடுங்கள்: தேர்தல் ஆணையம்
சென்னை:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்கள் கட்சி சின்னங்களில்தான் போட்டியிட வேண்டும் என தேர்தல் ஆணையம்அறிவித்துள்ளதால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவிருந்த சில தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.தலைமையிலான அணியில் போட்டியிடவிருக்கும் விடுதலை சிறுத்தைகள்,எம்.ஜி.ஆர். கழகம், தமிழ்நாடு ஐக்கிய முஸ்லீம் ஜமாத், உழவர் உழைப்பாளர் கட்சி ஆகியவை தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்தில்போட்டியிடவிருந்தன.
ஆனால் இப்போது தேர்தல் ஆணையம் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அந்தந்த கட்சிக்கான சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனஅறிவித்துள்ளதால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவிருந்த இந்த கட்சிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து முதல்வர் கருணாநிதி கூறுகையில், இந்த பிரச்சனை குறித்து இந்த மாதம் 9ம் தேதி தேர்தல் ஆணையர் கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில்விவாதிக்கப்படும்.
புதிய நீதிக்கட்சி தி.மு.க வில் இணையுமா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.தி.மு.க.174 தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறது என்றார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் திருமாவளவன் கூறுகையில், பாண்டிச்சேரியில் எங்களுக்கு மேலும் இரண்டு தொகுதிகள் வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம். இது குறித்து தி.மு.க. தோர்தல் குழுவினர் பேசி முடிவெடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்இந்த மாதம் 10ம் தேதி அல்லது 11ம் தேதி வெளிடப்படும் என்றார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications