நடராஜனிடம் ஏமாந்துவிட வேண்டாம்: அதிமுகவினருக்கு ஜெ. எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சசிகலாவின் கணவர் நடராஜனுடன் அ.தி.மு.வினர் யாரும் எந்தவிதமான தொடர்பும்வைத்துக் கொள்ளக்கூடாது என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாஎச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடராஜனுடன் அ.தி.மு.கவினர் யாரும் எந்த விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. அவருடன் தொடர்பு வைத்துக் கொள்பவர்கள் மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை நான் சந்தித்த ஒவ்வொரு தேர்தலின் போதும் நடராஜன் குறித்து நான்அறிக்கை வெளியிட வேண்டிய கட்டாயத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார். இப்போதுஅவர் திருந்தியிருப்பார் என நினைத்தேன். ஆனால் அவர் போக்கில் எந்த விதமானமாற்றமும் இல்லை.

எனக்கு உறுதுணையாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அவர் முயலுகிறார்.அதன் மூலம் அ.தி.மு.கவினரையும், தோழமை கட்சி தலைவர்களையும் ஏமாற்றமுயற்சித்து மோசடி செய்வது அவரது வழக்கம்.

நடராஜனுக்கும், அ.தி.மு.கவுக்கும் எந்த தொடர்பும் சம்பந்தமும் கிடையாது.அவருக்கு தொகுதிகள் முடிவு செய்வதிலோ அல்லது வேட்டபாளர் தேர்வுசெய்வதிலோ எவ்விதமான பங்கும் கிடையாது.

அவரை நான் பார்த்து 11 வருடங்கள் ஆகிவிட்டன. அவரை நான் ஒதுக்கியேவைத்திருக்கிறேன். என்னை அவர் பார்க்கவும் முடியாது. பேசவும் முடியாது.

தேர்தல் நெருங்கி வருவதால் மீண்டும் என்னுடனும், அ.தி.மு.கவுடனும் தொடர்புஇருப்பதாக அவர் காட்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டார்.

புத்தக வெளியீட்டு விழா என்ற பெயரில் பலர் முன்னிலையில் என்னைப் பற்றி பேசிஅ.தி.மு.கவினரை குழப்ப முயல்கிறார்.

இவர் புத்தகம் வெளியிடுவதிலும், விழாக்களில் பங்கேற்பதிலும் எனக்குஆட்சேபனை கிடையாது. ஆனால் என்னைப் பற்றி அவர் பேசுவதுஆட்சேபணைக்குரியது.

என்னைப் பற்றி பேச வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவர் விழாக்களேநடத்துகிறார். என்னைப் பற்றி பேசும் செய்திகள் பத்திரிக்கைகளில் வரவேண்டும்.அதன் மூலம் அ.தி.மு.கவுடன் தொடர்பு உள்ளது என அவர் காட்டிக் கொள்ளமுயல்கிறார்.

தேர்தலில் போட்டியிடவாய்ப்பு வாங்கித் தருவதாக அவர் பலரை ஏமாற்றி வருகிறார்.அது போல் யாராவது ஏமாந்தால் அதற்கு அவர்கள்தான் பொறுப்பு.

எப்போதும் போல் ஜெயலலிதாவின் வெற்றிக்குப் பின்னால் நான் இருப்பேன் எனஅவர் கூறுவது அ.தி.மு.கவினரை ஏமாற்றும் முயற்சி. என் வெற்றிக்கு பின்னால் பொதுமக்கள் தான் உள்ளனர்.

நடராஜனிடம் அ.தி.மு.கவினரும், தோழமை கட்சியினரும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும. அவருடன் அ.தி.மு.கவினர் யாரும் எந்த விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+