தலித் மக்கள் தி.மு.க.வை ஆதரிப்பார்கள்: திருமாவளவன்
சென்னை:
வரும் தமிழக சட்டசபை தேர்தலில் தே.ஜ.கூட்டணி அமோக வெற்றி பெறும். தமிழகத்தில் இருக்கும் தலித் இனமக்கள் அனைவரும் தி.மு.க. தலைமையிலான அணிக்கு ஆதரவு தருவார்கள் என விடுதலை சிறுத்தைகள்இயக்கத்தின் நிறுவன தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பா.ம.க.வை தி.மு.க.கூட்டணியிலிருந்து விலக்கியதன் மூலம்சமுதாய நீதிக்கு பாடுபடும் தலித்துக்களுக்கு ஆதரவளித்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி. இதற்காக நான்அவரை பாராட்டுகிறேன்.
தமிழகத்தில் தி.மு.கவுக்கு எதிர்ப்பு அலை எதுவும் இல்லை. நாங்கள் இந்த மாதம் 18ம் தேதி முதல் எங்கள் தேர்தல்பிரசாரத்தை துவக்கவுள்ளோம். மக்கள் அ.தி.மு.வில் இருக்கும் துரோகிகள், ஊழல்காரர்கள், வன்முறையைத் தூண்டிவிடுபவர்கள், ஜாதி வெறியர்கள் மற்றும் சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இநத மாதம் 16ம் தேதிஅறிவிக்கப்படும்.
த.மா.கா. வெற்றி பெற்ற 21 தொகுதிகளை அ.தி.மு.க. எடுத்துக் கொணடு விட்டது. இனியும் தனக்குஇழைக்கப்படும் அவமானங்களை பொறுத்துக் கொள்ளக் கூடாது. மூப்பனார் அ.தி.மு.கவிலிருந்து வெளியேறவேண்டும்.
ஊரப்பாக்கம் பஞ்சாயத்து தலைவர் மேனகா கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்குஉத்தரவிடப்பட வேண்டும். இன்னும் குற்றவாளிகள் தலைமறைவாக இருக்கிறார்கள்.
காரைக்குடியில் சேதப்பட்டிருக்கும் டாக்கடர் அம்பேத்கார் சிலையை மீண்டும் மாநில அரசு அமைக்க வேண்டும்என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
