ஜெ. தேர்தலில் போட்டியிட முடியாது என்கிறார் கருணாநிதி
சென்னை:
டான்சி நிலப் பேர ஊழல் வழக்கில் தனக்குக் கொடுத்த தண்டனையை ரத்து செய்யும்படி ஜெயலலிதா தொடர்ந்தவழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதையேகாட்டுகிறது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது அவர் தேர்தலில் நிற்கமுடியாது என்பதையே காட்டுகிறது.
அதாவது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது. டான்சிநிலப்பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கப்பட்டதால்அவரால் தேர்தலில் போட்டியிட வேண்டாம்.
மேலும் வழக்கை விசாரித்த நீதிபதி மலை சுப்ரமணியம் கூறுகையில், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறதுஎன்றும், ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா, முடியாதா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவுசெய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்என்று நாங்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவில்லை.
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது என்று கிடைத்துள்ள தீர்ப்பு திமுகவுக்குக் கிடைத்த வெற்றி அல்ல.தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. ஜெயலலிதாவுக்கு 1996 ம் ஆண்டு தேர்தலில் மக்கள் தண்டனைகொடுத்தார்கள். மேலும் பல ஊழல்கள் புரிந்த அவர் மீது நாங்கள வழக்குத் தொடர்ந்தோம்.
திமுக கூட்டணியில் இருந்த போது, தமாகா மற்றும் பாமக கட்சிகள், ஊழல் வழக்குகளில் ஜெயலலிதா மேல்நடவடிக்கை எடுக்க திமுக ஏன் தயக்கம் காட்டுகிறது என்று கேட்டார்கள். இப்போது அவர்களே அதிமுககூட்டணியில் உள்ளனர்.
ஜெயலலிதாவின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜெயலலிதா சுப்ரீம்கோர்ட்டுக்குச் சென்றாலும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை.
திமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சேருமா என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள்தமிழகத்தில் 9 தொகுதிகளும் பாண்டிச்சேரியில் 1 தொகுதியும் கேட்கிறார்கள். இதுகுறித்துப் பேச்சுவார்த்தைநடத்திக் கொண்டிருக்கிறோம் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications