இந்திய-வங்கதேச எல்லையில் சண்டை தொடர்கிறது
அசாம்:
அசாம் எல்லை பகுதியான மன்காச்சார் பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கும் (பி.எஸ்.எப்)வங்க தேச ரைபிள்ஸ் படை வீரர்களுக்கும் (பி.டி.ஆர்) இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
பிர்டிவா கடந்த வார கடைசியில் பி.டி.ஆர்.வீரர்களால் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.பி.டி.ஆருக்கும், பி.எஸ்.எப்க்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
இதுகுறித்து பி.எஸ்.எப். அதிகாரிகள் தெரிவிக்கையில் பி.டிஆர். இந்திய பகுதியில் இருக்கும் கிராமங்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர் என்றனர்.
தொடர்ந்து வரும் சண்டையில் இரு நாட்டிலும் சேர்த்து பலர் இறந்துள்ளனர். ஆனால் எத்தனை பேர் இறந்தார்கள்என்பது குறித்த விவரம் எதுவும் கிடைக்கவில்லை.
புதன்கிழமை இரவு பி.டி.ஆர் அசாம்-மேகலயா-வங்கதேச எல்லையில் இருக்கும் பி.எஸ்.எப் நிலைகள் மீதுதாக்குதல் நடத்தினர். பி.எஸ்.எப். வீர்ரகளும் பதில் தாக்குதல் நடத்தினர்.
பி.எஸ்.எப். அதிகாரிகள் கூறுகையில், இந்த சண்டையில் அசாம், துப்ரி மாவடத்தில் 9 பொதுமக்கள்காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்தூவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனகூறினர்.
இந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து வரும் சண்டை காரணமாகஇந்திய-வங்கதேச உறவுகளில் நெருக்கடி ஏற்படும் நிலை உண்டாகியுள்ளது.
இந்நிலையில் மேகலயா பகுதியில் இருக்கும் இந்திய -வங்கதேச எல்லையில் பி.எஸ்.எப். முகாமை நாலாபுறமும்சூழ்ந்திருந்த பி.டி.ஆரின் படைவீரர்களை விரட்டியடிக்கும் முயற்சியில் பி.எஸ்.எப் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நாலாபுறமும் சூழ்ந்திருந்த பி.டி.ஆர் வீரர்களில் இரண்டு புறம் இருந்த வீரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இன்னமும்இரண்டு புறங்களை பி.டி.ஆர் வீரர்கள் சூழந்துள்ளனர்.
வியாழக்கிழமை காலை வங்கதேச செய்தித்தாள்களில், புதன்கிழமை காலை முதல் காணாமல் போயிருந்தபி.எஸ்.எப் வீரர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. இவர்கள் கைகள் கட்டப்பட்டு, முகங்கள்மூடப்பட்டு, காயங்களுடன் காணப்பட்டனர்.
பி.டி.ஆரின் மகான்ட்னர் கூறுகையில் பிர்வா கிராமத்தில் நடந்த சண்டையில் இறந்து போன 16 பி.எஸ்.எப்.வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் உடல்களை ஒப்படைப்பதற்காக பி.எஸ்.எப் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு வருகிறோம் என்றார்.
நூற்றுக்கணக்கான வங்கதேசத்தவர்கள் பிர்டிவா கிராமத்திற்கு பி.டிஆர். உதவியுடன் குடியேறி வருகின்றனர்
அடுத்த மாதம் 10ம் தேதி மேற்கு வங்கம், அசாம் மாநிலங்கலில் தேர்தல் நடக்க இருப்பதால் அசம்பாவிதம் எதுவும்நடக்கமால் இருப்பதற்காக மேற்கு வங்காளம். வடக்கு 24 பர்கானா மாவட்ட அதிகாரிகள், வங்கதேசத்துடனானசர்வ தேச எல்லையை முடிவிடுமாறு கோரியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications