பிரச்சாரத்தை தொடர்கிறார் ஜெ.
சென்னை:
தனது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டபோதிலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தை புதன்கிழமை தொடர்ந்தார்.
ஜெயலலிதாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது அவருக்கு மக்களிடையேஅனுதாபத்தைத்தான் ஏற்படுத்தும் என அதிமுகவினர் கூறுகின்றனர்.
அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துள்ளகூட்டணி கட்சிகளும் ஜெயலலிதாவுக்குதொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.
தமிழ் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஞானசேகரன் கூறுகையில்,அ.தி.மு.கவுடனான எங்கள் கூட்டணி தொடரும். ஜெயலலிதாவின் வேட்புமனுநிராகரிப்பட்டதால் அ.தி.மு.கவுடனான எங்கள் கூட்டணியில் எந்த மாற்றமும்ஏற்படாது என்றார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறுகையில், ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள்தான் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் முதல்வராவதற்கு தடைவிதிக்கப்படவில்லை என்றார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பெருந்திரளாக கூடியிருந்தஆதரவாளர்களிடையே ஜெயலலிதா பேசுகையில், இது நியாயமா? தேர்தல் கமிஷன்செய்தது நியாயமா? என கேட்டார். கூடியிருந்த அதிமுகவினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக இல்லை என்று குரலெழுப்பினர்.
இதையடுத்து, நான் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக கருதிநீங்கள் அனைவரும் அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்து எங்களை வெற்றி பெறச்செய்யவேண்டும் என்றார்.
பா.ஜ.கவால் ராஜ்யசபா எம்.பியான ஜெயலலிதாவின் புதிய நண்பரும்பத்திரிக்கையாளருமான சோ கூறுகையில், ஜெயலலிதா போட்டியிட்டாலும் சரி,போட்டியிடாவிட்டாலும் சரி. தமிழக மக்கள் அ.தி.மு.க. அணிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் என்றார்.
அ.தி.மு.க.சார்பில் மயிலாப்பூரில் போட்டியிடும் வேட்பாளர் மைத்ரேயன் (முன்னாள்தமிழக பா.ஜ.க. முக்கிய புள்ளி) கூறுகையில். ஜெயலலிதா தேர்தலில்போட்டியிட்டாலும் போட்டியிடாவிட்டாலும் அவர்தான் முதல்வர் என்றார்.
ஜெயலலிதாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து அ.தி.மு.க. அவைத்தலைவர்காளிமுத்து கூறுகையில், இது கட்சியின் வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்காது.
தொண்டர்கள் கடுமையாக உழைத்து ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்குவார்கள்என்றார்.
அ.தி.மு.க. வழக்கறிஞர் பேரவை செய்தித் தொடர்பாளர் பிலிப் தாமஸ் கூறுகையில்,அ.தி.மு.க. வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட விஷயம் குறித்து தேர்தல் ஆணையத்தைஅணுகும் திட்டம் ஏதும் எங்களிடம் இல்லை. ஆனால், சுப்ரீம் கோர்ட் வழக்கறிரும்,முன்னாள் மேற்கு வங்க முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தார்த்த சங்கர் ரேஜெயலலிதாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து தேர்தல் கமிஷனுடன்விவாதம் நடத்தவுள்ளார் என்றார்.
ஜெயலலிதாவின் பிற வழக்கறிஞர்கள் கூறுகையில், கீழ் கோர்ட் ஜெயலலிதாவுக்குஅளித்துள்ள தண்டனை இறுதியானதல்ல. ஜெயலலிதா கீழ் கோர்ட்டின் தீர்ப்பைஎதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். உச்ச நீதிமன்றம்வழங்கும் தீர்ப்புதான் இறுதி தீர்ப்பாகும் என்றனர்.
ஒருவேளை அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானாலும், அவர்6 மாத காலத்திற்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானால்தான் அவர்முதல்வராக நீடிக்கு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications