தத்தளிக்கிறது இந்திய செயற்கைக்கோள்
பெங்களூர்:
கடந்த 18ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்-1செயற்கைக்கோள் குறிப்பிட்ட உயரத்தை எட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.
இதுகுறித்து இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கஸ்தூரிரங்கன் கூறுகையில்,
இந்த ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்ட ரஷ்யாவின் கிரையோஜனிக் என்ஜினில் போதிய திறன்கிடைக்கவில்லை. இதனால் செயற்கைக்கோளை போதிய உயரத்தில் ராக்கெட் செலுத்தவில்லை.இதனால், 36,000 கிலோமீட்டர் உயரத்தில் பூமியை வலம் வரவேண்டிய ஜிசாட்-1செயற்கைக்கோள் இப்போது 35,000 கிலோமீட்டர் உயரத்திலேயே தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
விண்ணில் நம் நாட்டுக்கு நேராக 24 மணி நேரமும் நிறுத்தப்பட வேண்டிய செயற்கைக்கோள் 23 மணி 2நிமிடங்கள் மட்டுமே நின்று கொண்டிருக்கிறது. மீதி 58 நிமிடங்கள் அது பாதை மாறிவிடுகிறது.
கிரையோஜனிக் ஒரு நல்ல எஞ்சின்தான். இருந்தாலும் இதில் உள்ள இரண்டு ப்ரொப்பல்லன்ட் டாங்குகளில்ஒன்று மிகவும் பழையதாகும். இதனால் ஏராளமான எரிபொருள் செலவாகிக் கொண்டே இருக்கிறது.
நம் நாட்டிலேயே கிரையோஜனிக் எஞ்சின்கள் சோதனை அளவில் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
டிஜிட்டல் ரேடியோ ஒலிபரப்பு, மற்றும் சில தொலைத் தொடர்பு வசதிகளைச் சோதனை செய்வதற்குமட்டும்தான் தற்போது இந்தச் செயற்கைக் கோள் ஏவப்பட்டுள்ளது. தன்னுடைய முழுமையானபணித்திறனை அடுத்தமுறை ஏவப்படும் செயற்கைக்கோள் காண்பிக்கும்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஜி.எஸ்.எல்.வி. மூலம் 1700 முதல் 1800 டன் வரை எடைகொண்டசெயற்கைக்கோள் ஏவப்படும். அதற்கு அடுத்தகட்மாக 2000 கிலோ எடைகொண்டசெயற்கைக்கோள்கள் விண்ணில் பாயவிருக்கின்றன.
இவ்வாறு கஸ்தூரிரங்கன் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications