நானே அடுத்த முதல்வர்.. ஜெயலலிதா உறுதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எனது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் கவலையில்லை. முன்பை விடஅதிவேகமாக எனது பிரசாரத்தை தீவிரப்படுத்துவேன். அதிமுக அணி வென்றால் நான்தான் முதல்வர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
4 தொகுதிகளில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், புதுக்கோட்டையில்செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால்,அதிமுக அணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது.
முன்பை விட வேகமாகவும், தீவிரமாகவும் எனது பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளேன்.
அதிமுக அணி ஜெயித்து வந்தால் அணியின் சார்பில் முதல்வர் பதவியை நான்தான்ஏற்பேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications