வழக்கறிஞர்கள் போராட்டம்: உயர் நீதிமன்றத்தில் அதிரடிப்படை குவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் அசாதாரணமான சூழ்நிலை நிலவியதால் வளாகம் முழுவதும்அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கறிஞர் பாக்கியராஜ் என்பவருக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர் சங்கத் தலைவர்கருப்பண் தலைமையில் வியாழக்கிழமை வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.

ஒவ்வொரு நீதிமன்ற அறைக்கும் சென்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தச் சம்பவத்தின்போது சில கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. நீதிபதி ஒருவருக்கு எதிராகக்கோஷமிட்டனர். இதனால் உயர்நீதிமன்றத்தில் பதற்றம் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமையும் போராட்டம் தொடரும்என்று வழக்கறிஞர்கள் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை நீதிமன்ற வளாகம் முழுவதும் அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.வக்கீல்களைக் கோர்ட்டுக்குள் நுழைய விடாமல் அவர்கள் தடுத்தனர். இதனால் கோர்ட் வளாகத்திற்கு வெளியேநின்று அவர்கள் கோஷமிட்டவாறு இருந்தனர்.

இந்த நிலையில், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், ரகளையில் ஈடுபட்டதாலும், வழக்கறிஞர் கருப்பணைஜாமீனில் வெளியே வர முடியாத சட்டப் பிரிவின் கீழ் உடனடியாகக் கைது செய்ய நீதிபதி நாராயண குரூப்உத்தரவிட்டார். இதுதொடர்பாக சென்னை நகரப் போலீஸ் கமிஷனருக்கும் உத்தரவு பிறப்பித்தார்.

கோர்ட் வளாகத்திற்குள் நடந்து கொண்ட விதத்திற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டுவழக்கறிஞர் கருப்பணுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நாராயண குரூப் உத்தரவு பிறப்பித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+