18 வருடம் ஜெயாவுக்கு வன வாசம் தான்: சுவாமி ஆரூடம்
பட்டுக்கோட்டை:
இன்னும் 18 ஆண்டுகளுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது என்றுஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறினார்.
வியாழக்கிழமை நிருபர்களுக்குப் பேட்டியளித்த போது,
ஜெயலலிதா 3 ஆயிரம் கோடி ரூபாயைக் கொள்ளையடித்து வெளிநாடுகளில்வைத்துள்ளார்.
பணத்தை சுருட்டுவதில் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் அவ்வளவு வித்தியாசம்ஒன்றும் கிடையாது.
ஜெயலலிதாவுக்கு சரியான தண்டனை கிடைத்துள்ளது.
அவர் இன்றைய சூழ்நிலையில் சட்டப்படி தேர்தலில் நிற்க முடியாது. அவர் எப்போதுவேண்டுமானாலும் ஜெயிலுக்குத்தான் போக நேரிடும்.
அவர் இன்னும் 18 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்றார்.
மு.க. ஸ்டாலின்:
ஜெ குறித்து ஸ்டாலின் கூறுகையில், 5 ஆண்டுகளுக்கு முன் ஊழல் ஆட்சி செய்து வந்தஜெயலலிதா, வேட்புமனுக்கள் தள்ளுபடியாகும் என்று தெரிந்தும் அதைச் செய்தார்.மனுக்கள் தள்ளுபடி ஆகிவிட்டன. இது கருணாநிதி செய்த சதி அல்ல; ஜெயலலிதாவின்விதி.
குமரி அனந்தன்:
குமரி அனந்தன் கூறுகையில், அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைமுதல்வராக இருந்தபோதே ஜெ. மீறியிருந்தார்.
கிருஷ்ணகிரியில் வேட்புமனு தாக்கல் செய்த போதே "நான் இரண்டு தொகுதிகளுக்குமேல் போட்டியிட மாட்டேன்" என்று சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்துப்போட்டுவிட்டு, மேலும் இரண்டு இடங்களில் போட்டியிட மனு கொடுத்து தேர்தல்சட்டத்தையும் மீறியுள்ளார்.
இது அறிந்தே செய்த குற்றம். எனவே, ஜெயலலிதா மனுக்கள் தள்ளுபடியானதால்அனுதாப "அலை"யும் வராது; "இலை"யும் வராது.
ஆர்.எம். வீரப்பன் கருத்து:
1996ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மக்கள் மன்றம் ஜெயலலிதாவைப்புறக்கணித்தது. இப்போது அவர் தேர்தலில் நிற்கவே முடியாது என்று இந்தியத் தேர்தல்சட்டம் தீர்ப்பு கூறியுள்ளது.
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்பார்கள். அவர் செய்த ஊழல்களெல்லாம்அவரைத் துரத்திக் கொண்டிருக்கின்றன.
திருநாவுக்கரசு:
இந்தத் தேர்தலில் மட்டுமல்ல, அடுத்த தேர்தலிலும் ஜெயலலிதா போட்டியிட முடியாது.ஏனென்றால் இவரால் 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது.
தேர்தல் கமிஷனின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் ஜெயலலிதாவின் நான்குவேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இது மாநில, மத்திய அரசுகளின் சூழ்ச்சிஎன்று ஜெ. கூறுவது தவறு.
திருமாவளவன்:
ஜெயலலிதாவின் 4 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால், அதிமுகவின்எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டது. அதிமுக கட்சி செய்த அராஜகத்துக்குக் கிடைத்தபரிசுதான் இது.
எப்படியாவது திமுகவினரைப் பழிவாங்க வேண்டும் என்று ஜெ. முயற்சி செய்தார். அதுநடைபெறாமல் போய்விட்டது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications