மின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயிற்சி முகாம்
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து தேர்தல் பணியாளர்களுக்குசென்னையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 11,500 பேர் இந்தப் பயிற்சியை எடுக்கவுள்ளனர்.
சட்டசபைத் தேர்தல் மே 10ஆம் தேதி நடக்கிறது. தேர்தல் தொடர்பான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தத் தேர்தலில்மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவது, அவற்றில் பிரச்சினை ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது போன்றவை குறித்துதேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்குப் பயிற்சி கொடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள தேர்தல் பணியாளர்களுக்கு 3 கட்டமாக இந்தப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. சென்னையில்மட்டும் மொத்தம் 11,500 பேர் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளனர்.
சென்னையில் உள்ள 14 தொகுதிகளிலும் உள்ள முக்கிய இடங்களில் இந்தப் பயிற்சி வழங்கப்படும். மொத்தம் 14 இடங்கள் இதற்காகதேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மொத்தம் 12,000 வெளி மாநிலத்திலிருந்து போலீஸார்வரவழைக்கப்படவுள்ளனர். இவர்களில் 79 கம்பெனி போலீஸார் ஏற்கனவே தமிழகம் வந்து விட்டனர். 41 கம்பெனிபோலீஸார் திங்கள்கிழமை இரவு அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் வந்து விடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications