ம.தி.மு.கவை கைகழுவுமா பா.ஜ.க.?
நாகர்கோயில்:
ம.தி.மு.க. மத்தியில் ஆட்சி செய்துவரும் தே.ஜ.கூட்டணிக்கு ஆதரவவை விலக்கிக் கொண்டாலும்தே.ஜ.கூட்டணிக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என பா.ஜ.க.தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
கன்னியாக்குமரி மாவட்டம், குழித்துறையில் ஜனா.கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், பிரதமர் வாஜ்பாய்தொடர்ந்து அந்த பதவியில் நீடிப்பார்.
அத்வானியை பிரதமராக்கும் திட்டம் எதுவும் கிடையாது. அத்வானியை பிரதமராக்கும் விதமாக எந்த செயலும்நடக்கவில்லை. பா.ஜ.கவை பொறுத்த வரை வாஜ்பாயும், அத்வானியும் பிரிக்க முடியாத இரட்டையர்கள்.
வங்கதேச துப்பாக்கி படை பிரிவினரால் இந்திய படை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில்புலனாய்வுதுறையினர் அஜாக்கிரதையாக நடந்து கொண்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது.
வங்கதேச படையினர் திடீரென இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உயிரிழந்தஇந்திய வீர்ரகளுக்கு தக்க நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றாலும் ஜெயலலிதா முதல்வராக முடியாது. ஊழல் வழக்கில்அவருக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பதால் அவர் முதல்வராக முடியாது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அதிக அளவில் ஜாதிக்கட்சிகள் இடம் பெற்றிருப்பதால் பா.ஜ.கவின்கொள்கையில் எந்த விதமான மாற்றமும் கிடையாது.
பா.ஜ.க. தொண்டர்கள் தி.மு.க.தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
தமிழகத்தில் தி.மு.க.தலைமையிலான தே.ஜ.கூட்டணியில் ம.தி.மு.க. இடம் பெறவில்லை. மத்தியில் இருக்கும்தே.ஜ.கூட்டணி அரசுக்கான ஆதரவை ம.தி.மு.க. விலக்கிக் கொண்டாலும் வாஜ்பாய் அரசுக்கு எந்த விதமானபாதிப்பும் ஏற்படாது என்றார்.
அவர் இவ்விதம் கூறியது தேர்தலுக்குப்பின் தே.ஜ.கூட்டணியிலிருந்து ம.தி.மு.க. கை கழுவிவிடப்படுமோ என்றசந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தில் அளித்த பேட்டி:
தெஹல்கா விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என காங்கிரஸ் விடுத்த கோரிக்கைநிராகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடந்து வரும் விசாரணை பாதிக்கப்படும் என்பதே காங்கிரசின்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கு காரணம்.
வாஜ்பாய் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியையும், ராஜீவ் காந்தியையும்தரக்குறைவாக விமர்சித்தார் என சோனியா காந்தி கூறுவது தவறு.
வாஜ்பாய் யாரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்தது கிடையாது. சோனியா வாஜ்பாயை தரக்குறைவாகவிமர்சனம் செய்தது தவறு.
நாடாளுமன்றத்தில் அமைதி ஏற்பட சோனியா காந்தியை சந்தித்து பேசவும் நான் தயாராக இருக்கிறேன் என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications