கொப்பரை தேங்காய் ஊழல்வாதிகளை கூண்டில் ஏற்றுவோம்: வைகோ
கோவை:
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொப்பரை தேங்காய் ஊழல் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவோம் என்று மதிமுகபொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
கோவை பேரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குனிசை முருகனை ஆதரித்து வைகோ பேசியதாவது:
ஜெயலலிதாவை விமர்சனம் செய்யாமல், வாக்குகளைப் பிரித்து மறைமுகமாக நான் உதவி செய்வதாககருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். அது உண்மை தான். எம்.ஜி.ஆருக்காக இன்னும் அதிமுகவில் இருப்பவர்களும்,திமுகவின் வாக்குகளையும் நாங்கள் பிரிக்கிறோம்.
இந்த பிரிக்கப்படும் வாக்குகளைக் கொண்டு நாங்கள் ஆட்சி அமைப்பதில் தவறு எதுவும் இருக்காது.கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் தமிழகத்தைப் பட்டாப் போட்டா கொடுத்துள்ளோம்?
ஸ்டாலினை முன்னிறுத்தி ஓட்டுக் கேட்டால், ஓட்டுக் கிடைக்காது என்பதால் கருணாநிதியே ஓட்டுக்களை வாங்கி,மகனுக்கு மகுடம் சூட்ட துடிக்கிறார்.
பொதுசிவில் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த கருணாநிதியால் முஸ்லிம்களின் உண்மையான நண்பனாகஇருக்க முடியாது.
காயிதே மில்லத் தபால் தலை வெளியிட வேண்டும் குரல் கொடுத்தவன் நான். அந்த தபால் தலைவெளியிட்டுவிழாவிற்கு கூட முதல்வர் என்னை அழைக்கவில்லை. அவ்வாறு அழைத்தால் அவருக்குக் கிடைக்கும் புகழ்எனக்குக் கிடைத்து விடும் என்று நினைத்து விட்டார்.
திமுக ஆட்சியைக் கலைக்க கூடாது எனக் குரல் கொடுத்தவன் நான். இதற்காக உழைத்த மதிமுகவிற்கு நன்றிக்கடன் இன்னும் திமுகவில் உள்ளது. இந்த நன்றியை நினைத்து மனம் புழுங்கி சிலர் எங்களுக்கு ஆதரவுதெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவும், கருணாநிதியும் இப்போது ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். இதில் ஒன்று ஊழல்கூட்டணி, மற்றொன்று சாதிக் கூட்டணி. இவை ஒன்றுக் கொன்று சளைத்ததல்ல.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கொப்பரைத் தேங்காய் ஊழல் வாதிகளை கூண்டில் ஏற்றுவோம் என்றார் வைகோ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications