மார்ச். 2002 ல் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும்
கோவை:
ராமர் கோயில் கட்டும் பணியை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் துவக்குவோம் என விஸ்வ ஹிந்து பரிசத்தின் சர்வதேசத் தலைவர்அசோக் சிங்கால் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ராமர் கோயில் கட்டும் பணியை அடுத்த ஆண்டு துவக்க உள்ளோம். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அடுத்த ஆண்டு பிப்ரவரிமாதம் 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை 5000 சாதுக்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
ராமர்கோயில் கட்ட முதல் தளத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. தூண்கள் தயாரிக்கும் பணியும் நடந்துவருகிறது. 2002ம் ஆண்டு சிவராத்திரியின்போது இந்தப் பணி துவங்கப்படும். ராமர்கோயில் கட்டுவதால் பாரதிய ஜனதாதலைமையிலான ஆட்சிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. இதனால் வன்றைச் சம்பவம் எதுவும் நடக்காது. இப்போது மட்டும்எங்கு வன்முறை ஏற்படாமல் இருக்கிறது?
விஸ்வஹிந்து பரிஷத் முடிவால் மத்திய அரசு கவிழ வாய்ப்பு இல்லை. அவ்வாறு வாய்ப்பு ஏற்பட்டாலும், ராமர்கோயில் கட்டும்திட்டத்தைக் கைவிட மாட்டோம். இந்த ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கின் தீர்ப்பிற்காக நாங்கள் காத்திருக்கத் தயாராகஇல்லை.
இது ராமர் கோயிலுக்குச் சொந்தமான இடம். இங்கு ராமர் கோயில்கட்ட காங்கிரஸ் கட்சியினர் உட்பட அனைத்து கட்சியினரும்ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவைப் போன்ற மதச்சார்பின்மையற்ற அரசு உலகில் வேறு எங்கும் கிடையாது.
வரும் அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் விஜயமந்திர அனுஷ்டானம் தொடங்கவுள்ளோம். இந்த வேள்வியில் 2 கோடி பேர், 2இலட்சம் இடங்களில், 2 மாதங்களில் 13 கோடி முறை "ஸ்ரீராம், ஜெயராம், ஜெயஜெய ராம் என்ற மந்திரத்தை உச்சரிப்பர். இதன்மூலம் இந்தியாவிற்கு நன்மை ஏற்படும். குற்றங்கள் குறையும். ஏன், உலகிற்கே நன்மை ஏற்படும் என்றார் அசோக் சிங்கால்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications