ஸ்டாலின் முதல்வராகலாம்: அன்பழகன்
கரூர்:
மு.க.ஸ்டாலின் முதல்வராவதில் என்ன தவறு இருக்கிறது என அன்பழகன் கேள்வி எழுப்பினார்.
கரூரில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து கல்வி அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமானக.அன்பழகன் பேசியதாவது:
தண்டனை பெற்றதால் ஜெயலலிதா தேர்தலில் நிற்க முடியவில்லை. தற்போது அவர் பெற்ற தண்டனையை கூட்டிக்கழித்துப் பார்த்தால் 22 ஆண்டுகள் வரும். இன்னும் உள்ள வழக்குகளில் தண்டனை பெற்றால், எல்லாம் சேர்த்துமொத்தம் 50 ஆண்டுகளாவது தேரும். எனவே, அவர் எப்போதும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைஉருவாகும்.
இரண்டுக்கு நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். அதிகாரிகளை மிரட்டியோ, அவர்களைசரிக்கட்டியோ தேர்தலில் போட்டியிடலாம் என முடிவு செய்து விட்டார். அவர் நேரடியாக வேட்பு மனுத் தாக்கல்செய்யாத தொகுதிகளில், யாரோ கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததாகச் சொல்கிறார். ஆட்சிக்கு வந்தால், யார்யாரோ எப்படி வேண்டுமாலும் எங்கு வேண்டுமானலும் கையெழுத்துப் போடுவார்களோ?
மு.க.ஸ்டாலின் முதல்வராகத் தகுதியில்லையா? அவர் என்ன தவறு செய்தார்? கருணாநிதிக்கு அடுத்து நான் தான்முதல்வர் ஆக வேண்டும் என வைகோ கூறியுள்ளார். முதல்வராவது பற்றி நானல்லவா சொல்லவேண்டும்.அதைப்பற்றி ஏன் அவர் கவலைப்பட வேண்டும் என்றார் அன்பழகன்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications