தேர்தல் ஆணையர் கில்லின் விளக்கம் தவறானது: வீரமணி
கோவை:
ண்ஜெயலலிதா வேட்பு மனுவை நிராகரித்தது குறித்து தேர்தல் கமிஷனர் அளித்த விளக்கம் தவறானது என திராவிடர்கழகப் பொதுச் செயலர் கி.வீரமணி தெரிவித்தார்.
திருப்பூர் மற்றும் கோவையில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கி. வீரமணி பிரசாரம் செய்துவருகிறார். அவர் பிரசாரத்தின்போது பேசியதாவது:
இந்துத்துவத்தை லட்சியமாகக் கொண்ட பாரதிய ஜனதாக் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்திருப்பதுவியப்பிற்குரிய விஷயமாக உள்ளது. திமுக தமிழர்களின் தனித்தன்மையும், பண்பாட்டையும் எப்படிப் பாதுகாக்கப்போகிறது என்பது தெரியவில்லை. சாதி ஒழிப்பை லட்சியமாகக் கொண்ட திமுக, இப்போது அவற்றைஅரவணைத்து செல்வதால் அதன் தனித்தன்மை எப்படி பாதுகாக்கப்படும் எனப் புரியவில்லை.
ஒவ்வொரு ஆட்சியிலும் பாலம் கட்ட திட்டமிட்டு சிமெண்ட் வாங்குவார்கள். ஆனால், திமுக ஆட்சியில் சிமெண்ட்விற்கவே பாலம் கட்டத் திட்டமிட்டனர். இதைத் தான் விஞ்ஞான தியான ஊழல் என சர்க்காரியா கமிஷன்தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா வேட்பு மனு குறித்து தேர்தல் கமிஷனர் கூறிய கருத்துக்கள் தவறானது. எந்த வழக்கிலுமேகீழ்நிலையில் உள்ள நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பு இறுதியானதாகது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை சரியாகஆய்வு செய்திருந்தால் கில் அப்படிக் கூறியிருக்க மாட்டார்.
எந்தக் குற்றம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து தீர்ப்பு வழங்கும்வரை இறுதியானதாகாது. வேட்பு மனுநிராகரிக்கப்பட்டது சட்ட வலிமை இல்லாதது. இது பழிக்குப் பழி வாங்கும் சதி திட்டம். இதற்கு மக்கள் சரியானதீர்ப்பு வழங்குவார்கள்.
தற்போது நடக்கும் தேர்தல் 5 மாநிலங்களின் தேர்தலுக்கும் முன் உதாரணமாக தமிழக தேர்தல் விளங்கும் என்றார்வீரமணி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications